சேலம் அல்லிக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் கமலநாதன், நவமணி தம்பதி. இவர்களது மகன் 25 வயதான நிவாஸ் தனியார் ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடந்த 15ஆம் தேதி அம்மாபேட்டை மணல் மார்க்கெட் பகுதி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து அவர் மீது மோதியதில் விபத்துக்குள்ளானார். பின்னர், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிவாஸ்ஸின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது அவர் திடீரென்று மூளைச்சாவு அடைந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பாகதான் நிவாஸின் தந்தை உயிரிழந்தார். இந்நிலையில் தற்போது நிவாஸின் இறப்பும் அவரது தாய் நவமணி மற்றும் அவரது சகோதரர் நரேஷ்-ஐ சோகத்தில் மூழ்க வைத்தது. இதையடுத்து நவமணி மற்றும் அவரது உறவினரை அரசு மருத்துவமனை அதிகாரிகள் சந்தித்து நிவாஸின் உடல் உறுப்புகளை தானம் செய்யுமாறு தெரிவித்தனர். எங்களுடைய மகன் இல்லை என்றாலும் சிலரின் வாழ்வில் அவன் மகிழ்ச்சியாக வாழ்வான் எனக்கூறி தாய் சம்மதம் தெரிவித்தார். சேலம் அரசு மருத்துவமனையில் உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டது. இருதயம், இரண்டு வால்வுகள், சிறுநீரகம், தோல் ஆகியவற்றை எடுத்து பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் தாயிடம் மகனின் உடல் ஒப்படைக்கப்பட்டது.நிவாஸ் இறப்பை தாங்க முடியாமல், அவரது நண்பர்கள் உறவினர்கள் கதறி அழுதது பார்ப்பவர்கள் கண்களை கலங்க வைத்தது. 


இதை தொடர்ந்து அவரது தாயார் கூறுகையில், தனியார் பேருந்து கவனத்துடன் இயக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும், இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றபோது தனியார் பேருந்து வேகமாக வந்து விபத்தை ஏற்படுத்தியது. என் மகனின் உயிரை பறித்துவிட்டது என்றும் கூறினார்.என் மகன் இறந்துவிட்டாலும் அவனுடைய உடல் உறுப்புகள் மூலம் மற்றவர்கள் வாழ்க்கையில் வாழ்வான் என்று தாய் தெரிவித்தார்.


மேலும் படிக்க | Crime News: மது கொடுத்து கணவரை துண்டு துண்டாக வெட்டி கொன்ற மனைவி; தேவிபட்டினத்தில் நடந்த கொடூரம்


ஆகமொத்தத்தில், உடல் உறுப்புகள் தானம் மூலம் மகன் நிவாஸ் உயிரோடுதான் வாழ்கிறான் என்ற அசாத்திய நம்பிக்கையோடு தனயனை காத்த தாயாக விளங்குகிறார், நவமணி.  


மேலும் படிக்க | தூத்துக்குடியில் இன்னொரு பயங்கரம் - காதல் திருமணம் செய்த தம்பதி கொலை !


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ