சேலத்தில் 50க்கும் மேற்பட்ட நர்ஸிங் மாணவிகளுக்கு உடல்நல பாதிப்பு... மூடப்பட்ட சமையல் கூடம் - முழு விவரம்!
TN Latest News Updates: சேலத்தில் செவிலியர் கல்லூரி விடுதியில் வழங்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்டதில் 50க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு கடுமையான உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்தும் இதன் அப்டேட்டையும் இதில் காணலாம்.
TN Latest News Updates: சேலம் மாவட்டத்தில் எஸ்பிசி நர்சிங் காலேஜ் அயோத்தியபட்டினம் என்ற கல்லூரியில் மாணவிகளுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி நேற்று மதியம் உணவு சாப்பிட்டதில் இருந்து ஏற்பட்டுள்ளது.50க்கும் மேற்பட்டோர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் நேரில் நலம் விசாரித்தார்.
சேலம் குப்பனூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் செவிலியர் கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி பயந்து வருகின்றனர்.இந்த நிலையில் நேற்று காலை மாணவிகளுக்கு வழக்கம்போல உணவு வழங்கப்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் மாணவிகள் திடீரென அடுத்தடுத்து மயங்கி விழுந்துள்ளனர். மேலும் வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை நிர்வாகம் தங்களுக்கு சொந்தமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதல் சிகிச்சை அளித்துள்ளனர்.
ஆனால் தொடர்ந்து மாணவிகளின் நிலைமை மோசமாகவே உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்துள்ளனர். சேலம் அரசு மருத்துவமனைக்கு மயங்கிய நிலையில் வந்த மாணவிகளை அரசு மருத்துவர்கள் அனுமதித்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.
60க்கும் மேற்பட்ட மாணவிகள் தனித்தனி பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மாணவிகள் உணவு சாப்பிட்டு வாந்தி மயக்கம் ஏற்பட்டதை அறிந்த அவரது பெற்றோர்கள் உறவினர்கள் மருத்துவமனை கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, சேலம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவிகளிடம் நலம் விசாரித்தார். மேலும் மாணவிகளுக்கு வழங்கப்பட்ட உணவு குறித்து தனியார் மருத்துவ செவிலியர் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்திடம் உரிய விளக்கம் கேட்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து கிடைத்த தகவலின் பெயரில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மருத்துவர் இரா கதிரவன் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் சிங்காரவேல் ரமேஷ் ஆகிய குழு இன்று ஆய்வு செய்தது.
அந்த ஆய்வில் சில உணவு பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டது அந்தக் கல்லூரி நிர்வாகம் அங்கு நடத்தப்படும் விடுதிக்கு உணவு பாதுகாப்பு துறையிடம் உரிமம் பெறவில்லை. அங்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மருத்துவ பரிசோதனை செய்யப்படவில்லை. விடுதியின் சமையல் கூடம் போதுமான இட வசதி கொண்டதாக அமையவில்லை. மேலும் சுகாதாரமாகவும் காணப்படவில்லை.
அங்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் சாக்கடை நீருடன் கலக்கப்படுவது ஆய்வில் கண்டறியப்பட்டது. இக்குறைபாடுகளை சுட்டிக்காட்டி கல்லூரி வளாகத்திற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விடுதியில் உள்ள சமையல் கூடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நோட்டீசில் கண்டறியப்பட்டுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்த செய்த பின்னர் உணவு பாதுகாப்பு துறையிடம் அனுமதி பெற்று மீண்டும் இயங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அலுவலகத்தில் இருந்து ஏழு உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் இரண்டு தண்ணீர் மாதிரிகளும் அடங்கும் இவ்உணவு மாதிரிகளின் ஆய்வறிக்கை பெறப்பட்ட பின்னர் உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி மேல் நடவடிக்கை தொடரப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | பாஜகவுக்கு விலாசம் தேட ஜெயலலிதாவா கிடைச்சாங்க? அண்ணாமலையை விளாசிய உதயகுமார்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ