பெரியப்பா மகன், நண்பன், டெய்லர்... சிறுமிக்கு நடந்த கொடூரம்: சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்

சகோதரர் முறை கொண்ட பெரியப்பா மகன், டெய்லர், பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுவன் என 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : May 28, 2024, 01:04 PM IST
  • 11 வயது சிறுமியை கடந்த 6 மாதங்களாக பாலியில் துஷ்பிரோயகம் செய்த கும்பல்.
  • சகோதரர் முறை கொண்ட பெரியப்பா மகன், டெய்லர், பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுவன் என 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை.
  • தாய் - தந்தை இருவரும் மதுபோதைக்கு அடிமையானதால் இந்த நிலைக்கு தள்ளப்பட்ட சிறுமி.
பெரியப்பா மகன், நண்பன், டெய்லர்... சிறுமிக்கு நடந்த கொடூரம்: சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் title=

அயனாவரத்தில் 2018 ஆம் ஆண்டு 11 வயது மாற்றுத் திறனாளி சிறுமி பாலியில் துஷ்பிரோயகத்திற்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே போன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடந்துள்ளது. 11 வயது சிறுமியை கடந்த 6 மாதங்களாக ஒரு கும்பல் பாலியில் ரீதியாக துன்புறுத்தியுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

சகோதரர் முறை கொண்ட பெரியப்பா மகன், டெய்லர், பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுவன் என 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய், தந்தை இருவரும் மதுபோதைக்கு அடிமையானதால் சிறுமி இந்த நிலைக்கு தள்ளப்பட்டார் என கூறப்படுகின்றது. 

சென்னை வில்லிவாக்கம் காவல்நிலைய எல்லைக்குப்பட்ட பகுதியில் வசித்து வரும் செல்வம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பெயின்டராக பணியாற்றி வருகிறார். செல்வமும் அவரது மனைவியும், மதுபோதைக்கு அடிமையானவர்கள் எனக்கூறப்படுகிறது. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

மூத்த மகள் அரசு பள்ளி ஒன்றில் 5 வகுப்பு முடித்து 6 வகுப்புக்கு செல்ல உள்ளார். 11 வயதான இந்த சிறுமி நேற்று திருவேற்காடு பகுதியில் வசிக்கும் சித்தியிடம் தனக்கு கடுமையான வயிற்று வலி மற்றும் பிறப்புறுப்பில் வலிப்பதாகவும்,  தனது பெரியப்பா மகன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும்,  தொடர்ந்து இது போன்று நடப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது சித்தி,  தனது தாயாரிடம் தகவலை தெரிவித்து சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் நீண்ட நாட்களாக சிறுமி பாலியில் துஷ்பிரோயகம் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்ததை தொடர்ந்து சிறுமியின் பாட்டி வில்லிவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் சிறுமியை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. சிறுமியிடம் முதலில் 16 வயதே ஆன பெரியப்பா மகன் திண்பண்டங்களை வாங்கி கொடுத்து சிறுமியை சீரழித்துள்ளதும் அதனை எதிர்வீட்டில் இருக்கும் மற்றோரு 16 வயது சிறுவன் பார்த்து சிறுமியை மிரட்டி சீரழித்தும் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க | விவசாயிகள், தூய்மை பணியாளர்களுக்கு அன்னதானம் வழங்கிய தமிழக வெற்றி கழகத்தினர்!

அதே போல அதே பகுதியில் டெய்லர் கடை நடத்தி வரும் டெய்லர் குமார் என்பவனும் சிறுமியை சீரழித்துள்ளதும் தெரியவந்துள்ளது. பெரியப்பா மகனின் நண்பன் என பலர் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டுள்ளதும், கடந்த 6 மாதங்களாக இந்த வேதனைகளை அனுபவித்து வரும் சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவிக்க முயன்ற போது அவர்கள் மதுபோதையில் அதனை கண்டுகொள்ளவில்லை எனவும் நேற்றும் அந்த பெரியப்பா மகன் மீண்டும் தன்னிடம் தவறாக நடந்ததால் தன்னால் வலி தாங்க முடியாமல் தனது சித்தியை சந்தித்து இதை கூறியதாகவும் வேதனையோடு சிறுமி கூறியுள்ளார்.

போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீசார் பெரியப்பா மகன், பக்கத்து வீட்டு சிறுவன், டெய்லர் குமார் ஆகிய மூவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும், சிகிச்சை அளிக்கவும் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் வேறு யாரெல்லாம் இது போன்று சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டுள்ளனர் என்ற விசாரணையை வில்லிவாக்கம் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க | TNPSC Group 4 ஹால்டிக்கெட் வெளியீடு! பதிவிறக்கம் செய்வது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News