சேலம்: குடிநீர் வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
சேலம் அருகே குடிநீர் முறையாக வழங்கப்படாததைக் கண்டித்து, பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேரூராட்சி உட்பட்ட பகுதியில் 18 வார்டுகள் உள்ளன. அதில், கோனேரிப்பட்டி கிழக்கு காலனி பகுதியில் கடந்த நான்கு மாதங்களாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், இது சம்பந்தமாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பலமுறை கையெழுத்திட்டு புகார் மனுக்களை பேரூராட்சி அலுவலகத்தில் கொடுத்து வந்துள்ளனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த நான்கு நாட்களாக அப்பகுதியில் நடைபெற்ற தூய சலேத் அன்னை ஆலயத்தின் தேர் விழாவுக்கு கூட தண்ணீர் இல்லை.
மேலும் படிக்க | 1 ரூபாய்க்கு இட்லி வடை; பசியாற்றும் நல்லூர் கிராமத்தின் இட்லிக் கடை!
இதனால், விலைக்கு தண்ணீர் வாங்கி பயன்படுத்தியுள்ளனர். தொடர்ச்சியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த கோனேரிப்பட்டி கிழக்கு காலனி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், திடீரென தம்மம்பட்டி-கெங்கவல்லி செல்லும் சாலையில் காலி குடங் களுடன் மறியலில் ஈடுபட்டனர். சுமார் 50- க்கும் மேற்பட்ட பெண்கள் மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த தம்மம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், மற்றும் கெங்கவல்லி தாசில்தார் வெங்கடேசன், பேரூராட்சி அலுவலர்களும் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக அப்பகுதி மக்களுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதன்பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். குடிநீர் கேட்டு சாலை மறியல் ஈடுபட்டதால் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் படிக்க | அரசு பள்ளி தலைமை ஆசிரியரைத் தாக்கும் திமுக கவுன்சிலரின் கணவர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ