சேலத்தில் நடந்த பரிதாபம்: கொரோனா அச்சத்தில் தூக்கில் தொங்கிய பெண்
சேலத்தில் உள்ள ஒரு தனிமைப்படுத்தப்படும் மையத்தில் இருந்த 40 வயது பெண் ஒருவர் திங்களன்று தற்கொலை செய்துகொண்டார்.
சேலம்: கொரோனா (Corona) தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்ட பலர், மன உறுதியுடன் இதை எதிர்த்துப் போராடி, வெற்றிபெற்று வருகிறார்கள். எனினும், சிலர் தொற்றின் அச்சத்தினாலேயே துவண்டு விடுகிறார்கள். சேலத்தில் நடந்துள்ள சம்பவம் அதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.
சேலத்தில் (Salem) உள்ள ஒரு தனிமைப்படுத்தப்படும் மையத்தில் (Quarantine Centre) இருந்த 40 வயது பெண் (Woman) ஒருவர் திங்களன்று தற்கொலை (Suicide) செய்துகொண்டார். கெ.மாரியம்மாள் என்ற அந்தப் பெண், கொண்டலம்பட்டிக்கு அருகில் உள்ள பாலி பகுதியைச் சேர்ந்த இல்லத்தரசி என தெரியவந்துள்ளது.
ALSO READ: தமிழகத்தில் மேலும் 3,827 பேருக்கு கொரோனா... மொத்த பாதிப்பு 1,14,978 ஆக உயர்வு..!
மாரியம்மாளின் அண்டை வீட்டில் இருந்த ஒருவரின் கோவிட்-19 பரிசோதனை நேர்மறையாக வந்தபிறகு, சுகாதார அதிகாரிகள், மாரியம்மாளையும், பெண்களுக்கான சேலம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள தனிமைப்படுத்தும் மையத்திற்கு அழைத்துச் சென்றனர். மாரியம்மாள் மற்றும் அவரது பிற அண்டை வீட்டாரின் பரிசோதனை எதிர்மறையாகவே வந்துள்ளது.
சோதனை முடிவு எதிர்மறையாக வந்தாலும், மாரியம்மாளை, சில நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படும் மையத்தில் தங்குமாறு சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறினர்.
இந்நிலையில், இந்த மையத்தின் ஒரு அறையில், மாரியம்மாள் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தற்கொலை செய்ததற்கான காரணம் இன்னும் தெளிவாகவில்லை. எனினும், கொரோனா தொற்று தன்னையும் தாக்கி விடுமோ என்ற அச்சத்தில் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகத் தெரிகிறது.
காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணையில் இறங்கியுள்ளது.
கொரோனா தொற்று என்பது ஒரு சாதாரண காய்ச்சல் போன்றதுதான். உடலில் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரித்துக்கொண்டால், ஒரு வேளை இந்தத் தொற்று நம்மைத் தாக்கினாலும் நாம் அதிலிருந்து எளிதாக குணமடைந்து விடலாம் என்று அரசாங்கம் பலமுறை அறிவுறுத்தல்களை வெளியிட்டு வருகிறது. மக்கள் அதைப் புரிந்துகொண்டு இந்த இக்கட்டான சூழ்நிலையில் மன உறுதியுடன் இருக்க பழகிக்கொள்ள வேண்டும். தற்கொலை எந்தப் பிரச்சனைக்கும் தீர்வாகாது!!
ALSO READ: கோவையில் நகை பட்டறைக்கு சீல்....34 பேருக்கு கொரோனா தொற்று.....