மதுரை பழங்காநத்தம் சுற்றுசாலையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 7 வது பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து விளக்க பொதுக்கூட்டம் அக்கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த பொதுகூட்டத்தில் ஏராளமான சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.  தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் பேசும்போது, தீர்மான விளக்க கூட்டத்தில் வாயிலாக உங்கள் நாட்டாமை முதல்வராக வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது, 2026 ஆம் ஆண்டு தேர்தலின் போது தெரிய வரும்.  மது உடல் ஆற்றலை இழக்க செய்து மனஅழுத்தத்தை உண்டாகி வருகிறது.  பல்வேறு போதைகள் இன்று பரிணமித்து கஞ்சா, குட்கா போன்ற பலவகை உருவெடுத்து உள்ளது. அதனை கட்டுப்படுத்தும் பணியும் தரமாக நடைபெற்று வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | முதல்வர் இல்லாத நேரத்தில் வேண்டுமென்றே நடத்தப்படும் ரெய்டு இது-ஆர்.எஸ் பாரதி


ஆனால் 2025ல் இளைஞர்கள் அதிகம் கொண்ட நாடாக உருவாகும் என்பதனை அடுத்து இளைஞர்களின் மூளையை மலுங்கடிக்க செய்வதற்கான வெளிநாடுகளில் சதிதான்.  எனக்கு 69 வயது ஆகிறது. இன்னும் 150 வயது வரையில் உயிருடன் வாழ்வதற்கான வித்தையை கற்று உள்ளேன், அதனை 2026  ஆண்டு அறியணையில் என்னை ஏற்றினால் சொல்வேன்.  தற்போது நமது கூட்டத்தில் 440 வோல்ட் போதையில் வந்து தள்ளாடியபடி பேசி வருகிறார், அவரை திருத்து வகையில் அவருடன் பேச வேண்டும் என்று  விருப்பம்தான் ஆனால் நிலைமை சரியில்லை.  தமிழகத்தில் எத்தனை மதுக்கடைகள் இருந்தாலும் தனிமனித ஒழுக்கத்துடன் மதுவை புறக்கணித்தால் மட்டும் போதும்.  தானாகவே கடைகள் மூடப்பட்டுவிடும்.


பள்ளி சிறுவர்கள் போதைக்கு அடிமையாக இருப்பதை நானே பார்த்துள்ளேன், அவர்கள் கண்காணிப்பதுடன் போதை பொருள்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கூடங்குளம் வந்தால் தான் மின்மிகை மாநிலமாக தமிழகம் திகழவேண்டும் என்பதற்காக உடலை வருத்தி உண்ணாவிரதம் செய்தேன், அதன் படி தற்போது பொருளாதாரம் முன்னோக்கி வருகிறது.  தமிழகத்தின் கல்வி இந்திய அளவில்  சிறந்ததாக திகழும் சூழலில், அறிவார்ந்த இளைஞர்கள் இருந்தும் போதைக்கு அடிமையாக இருப்பதால் தமிழ்நாடு தள்ளாடுகிறது.  "social Drinking" என்கிற பேரில் பணியிடங்களில் மேலை நாட்டு கலாச்சாரங்களை இளைஞர்கள் தவிர்க்கவேண்டும்.  மாலை வேலைக்கு பிறகு வீட்டிற்கு தாமதமாக வரும் பிள்ளைகளை பெற்றோர்கள் ஊதா சொல்லி சோதனை செய்யுங்கள் அதில் தவறே இல்லை.


மது இல்லாத மாநிலங்கள் இந்தியாவில் உள்ளது, அம்மாநிலங்களில் குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளதை முன்மாதிரியாக கொண்டு தமிழகத்திலும் மது விலக்கை அமுல்படுத்த முன்வரவேண்டும்.  அதன், முதல் நோக்கமாக மதுவை தவிர்ப்போம் என்பதை முன்னெடுத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆரோக்கியமான வாழ்க்கையை உருவாக்குவோம் என்று பேசினார்.  பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் பாத்திரத்தில் கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் கவனம் ஈர்த்து வருவதோடு, தமிழ் சினிமாவில் அதிக படங்களில் நடித்து வரும் நடிகராகவும் உருவெடுத்துள்ளார். தற்போது இவர் 20க்கும் மேற்பட்ட படங்களில், நாயகன், வில்லன், வெப் சீரிஸ் என படு பிஸியாக நடித்து வருகிறார். 


மேலும் படிக்க | ஐடி ரெய்டு அதிகாரிகள் சுவர் ஏறி குதித்தது ஏன்...? - செந்தில் பாலாஜி கேள்வி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ