சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'சர்கார்' படம் தீபாவளியன்று திரைக்கு வந்தது. தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி நடைபோட்டு வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் அரசியல் தலைவர்களை விமர்சிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளது எனவும், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக்கோரி அ.தி.மு.க-வினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் திரையரங்குகளில் வைக்கப்பட்டு இருந்த நடிகர் பேனர்களை கிழித்தனர். இதனால் சில இடங்களில் கட்சிகள் ரத்து செய்யப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கைது செய்யப்பட்ட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வந்ததை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரி ஏ.ஆர்.முருகதாஸ் மனுதாக்கல் செய்துள்ளார்.


சர்கார் படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக தியேட்டர் உரிமையாளர் சஙகம் ஒப்புதல் அளித்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.