விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள சர்கார் திரைப்படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தீபாவளியை முன்னிட்டு விஜய் நடித்த சர்கார் திரைப்படம் நேற்று திரைக்கு வந்தது. தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி நடைபோட்டு வருகிறது இத்திரைப்படம். இந்நிலையில் இந்த திரைப்படத்தில் அரசியல் தலைவர்களை விமர்சிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.


இதுகுறித்து அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடன் தெரிவித்ததாவது...



"சர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றுள்ளது என்று தகவல் கிடைத்துள்ளது. மேலும், இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் கலந்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


கலாநிதி மாறன் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் அரசியல் நோக்கம் கொண்டுள்ளதாக தெரிகிறது. திரைத்துறையில் வளர்ந்து வரும் நட்சத்திரமான விஜய் இதுபோன்ற திரைப்படங்களில் நடிப்பது ஏற்புடையதல்ல.


திரைப்பட தனிக்கை குழு மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. எனவே படத்தின் தனிக்கை சான்றிதழ் குறித்து நாங்கள் பேச விரும்பவில்லை. திரைப்படத்தில் இருந்து சர்ச்சைக்குறிய காட்சிகளை நீக்க வேண்டும், நீக்கவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.