சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ, 4500 கோடி மதிப்பிலான சொத்துகளை கையகப்படுத்த வருமான வரித் துறை திட்டமிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதற்காக சசிகலா மற்றும் அவரின் உறவினர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.மேலும் இந்த சொத்துகள் குறித்து 3 மாதத்துக்குள் விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.


சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளார். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான 187 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டது.


இதனையடுத்து, சசிகலா அறையில் நடத்திய சோதனையின்போது பென்டிரைவை வருமானவரித்துறையினர் கண்டுபிடித்தனர். பென்டிரைவை ஆய்வு செய்தபோது 80 நிறுவனங்களில் முதலீடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.


மேலும், ஷெல் நிறுவனங்கள் எனப்படும் செயலற்ற நிறுவனங்களின் மீது சசிகலா குடும்பத்தினர் ரூ. 4500 கோடி சொத்துகளை குவித்திருப்பதாக வருமான வரித்துறையின் ஆய்வில் தெரியவந்துள்ளது.


சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து சசிகலாவிடம் பிப்.10-ஆம் தேதி விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர்.


எனினும் தான் ஜெயலலிதாவுக்காக பிப்ரவரி 10-ஆம் தேதி வரை மௌன விரதம் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராக முடியாது என்று கூறிவிட்டதால் வேறு ஒரு தேதியில் சிறைக்கே சென்று விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.