தொலைதூர கல்வி மூலம் கன்னடம் கற்க சசிகலா ஆர்வம்!
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்த படி, கன்னடம் கற்க சசிகலா ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்த படி, கன்னடம் கற்க சசிகலா ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், கடந்த பிப்ரவரி 2017ல் சசிகலாவிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அதிமுகவிற்கு தலைமை வகிக்கும் கனவு தகர்ந்து போனது. இதையடுத்து பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
ஆரம்பத்தில் அவர் கன்னடம் கற்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார். சிறையில் அவர் கல்வி திட்டத்தின் கீழ் நடைபெறும் வகுப்புகளில் கலந்து கொண்டு கன்னடம் பயில தொடங்கினார். இதனால் அவர் கன்னட மொழி பேசுவதுடன், பிறர் பேசுவதையும் புரிந்து கொள்ளும் அளவுக்கு திறமையை வளர்த்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள கைதிகள் பெங்களூரு பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலம் சான்றிதழுடன் கூடிய படிப்புகளை படித்து வருகிறார்கள். இவர்களுக்கு சிறையில் பேராசிரியர்கள் பாடங்கள் நடத்துவதுடன், அங்கேயே தேர்வு எழுதவும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கன்னட மொழி கற்கும் ஆர்வத்தை, சிறையில் நியமிக்கப்பட்டிருக்கும் ஆசிரியர் மற்றும் மூத்த அதிகாரிகளிடம் சசிகலா வெளிப்படுத்தியுள்ளார்.