சென்னை: அரசியல் சதுரங்கத்தில் சசிகலா காய்களை நகர்த்தத் தொடங்கிவிட்டார். சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து வெளியில் வந்த சசிகலா தேர்தல் முடியும் வரை அமைதியாக இருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்போது மீண்டும் அதிமுகவை  மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். முன்னதாக, அவர் வெளியிட்ட தீபாவளி வாழ்த்து அறிக்கையில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் என் கையெழுதிட்டிருந்தார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.


மழை வெள்ள பாதிப்புகளை விரைந்து சரி செய்ய தமிழக அரசை கேட்டுக்கொள்வதாக  ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள சசிகலா, அதில் கட்சியின் பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டுள்ளார். 
சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:



 “மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை விரைந்து சரி செய்ய தமிழக அரசை மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். ஆட்சியாளர்கள் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு கொண்டு இருக்கிறீர்கள், மண்டல வாரியாக அதிகாரிகள் நியமித்து விட்டீர்கள், இலவச தொலைபேசி எண்கள் அறிவித்தாகிவிட்டது. அமைச்சர்களோ தேங்கிய நீரை அகற்றிவிட்டோம் என்று தொடர்ச்சியாக போட்டி போட்டு கொண்டு பேட்டி கொடுத்தவண்ணம் இருக்கிறார்கள்.
ஆனால் உண்மை நிலை என்னவென்றால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பாக சென்னையின் அனைத்து பகுதிகளிலும் எங்கு பார்த்தாலும் கொஞ்சம் கூட மழை நீர் வடியாமல் வெள்ள காடாக காட்சி அளிக்கிறது. கடந்த காலங்களில் இது போன்ற சூழ்நிலைகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் துரிதமாக செயல்பட்டு ராட்சத மோட்டார்பம்புகளைகளை அதிக எண்ணிக்கையில் பிற மாவட்டங்களிலிருந்தும் வரவழைத்து 24 மணி நேரத்திற்குள் சரி செய்துள்ளார்கள். 


ALSO READ |  அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா திடீர் கடிதம்; சர்ச்சையாகும் விவகாரம்


அதே போன்று துரிதமாக நடவடிக்கைகளை மேற்கொண்டால்தான் விரைவில் நீரை வெளியேற்ற முடியும். மேலும், வெள்ளம் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ள நிலையில்,  போர்களில் நீர் இருந்தும் மோட்டார் மூலம் நீரை மாடியில் உள்ள டேங்குகளில் ஏற்ற முடியாமல் தண்ணீர் இரண்டு நாட்களாக அவதிப்படுவதாக வீடுகளில் குடியிருப்போர் சொல்கிறார்கள்.


மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாமல் தவிக்கின்றனர். இது போன்று, மழை நீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் உள்ள இயலாத மக்களுக்கு தேவையான குடிநீர், லாரிகள் மூலம் வினியோகம் செய்ய வேண்டும். அதேபோல் வீட்டிலிருந்து வெளிவர முடியாதவர்களுக்கு உணவு பொட்டலங்கள், குழந்தைகளுக்கு தேவைப்படும் பால், வயதானவர்கள் மற்றும் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு இருப்பவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் மற்றும் பெண்களுக்கு அத்தியாவசிய தேவையான நாப்கின்களும் கிடைக்க இந்த அரசு உடனே ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், முகாம்களில் தங்க வைத்துள்ள மக்களுக்கு சுகாதாரமான உணவு, மருத்துவ உதவிகள் தடையின்றி கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். 
மேலும், ஆட்சியாளர்கள் வெள்ளப் பகுதிகளை பார்வையிட செல்வதால், அங்கு உள்ள அரசு அதிகாரிகள் மீட்பு பணிகளில் ஈடுபடுவதை தவிர்த்து அவர்களுக்கு வரைபடங்களை காண்பித்து விளக்கம் கொடுப்பதிலேயே பெரும்பகுதி நேரத்தை செலவிடுகிறார்கள்,


இந்த அரசு எந்த வித முன்னேற்பாடும் இல்லாத காரணத்தினால்தான் தற்போது இந்த அளவுக்கு மக்கள் பாதிப்படைந்து இருப்பதாக அனைவரும் கருதுகின்றனர். இதுபோன்று மழைக்காலங்களில் சென்னையில் ஏற்படுகின்ற வெள்ளப்பாதிப்புகளுக்கு மிக
முக்கிய காரணமே, திமுக ஆட்சிக்காலத்தில் எந்தவித வடிகால் வசதியும் இன்றி தொலைநோக்கு பார்வை இல்லாமல் சில முக்கிய சாலைகளில் கட்டப்பட்ட பாலங்கள்தான் என்று ஆய்வாளர்களும், மக்களும் கருதுகின்றனர். 


தமிழக மக்கள் இந்த அளவுக்கு மிகவும் மோசமாக பாதிப்படைந்துள்ள நிலையில், தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, மேலும் வலுவடைந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால், ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மக்களை காப்பாற்ற தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் இப்போதே தயார் நிலையில் இருக்குமாறு வைத்துக்கொள்ள இந்த அரசை வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன்.


ALSO READ |  ஓபிஎஸ் ஒரேபோடு.. சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்படும்!


தற்போது உள்ள ஆட்சியாளர்களால் இன்றைய காலகட்டத்தில் நம்மிடம் உள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விரைந்து சரி செய்து மக்களை காப்பாற்ற வாய்ப்பு இருப்பதால் அதை உடனடியாக போர்க்கால அடிப்படையில் செய்திட வேண்டும்.
தமிழகத்தில் தற்போது பெய்து வரும் இந்த மழையின் காரணமாக பல இடங்களில் வீட்டு சுவர்கள் இடிந்து விழுந்துள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அவ்வாறு வீட்டு சுவர் இடிந்து தங்கள் இருப்பிடத்தை இழந்தவர்களுக்கு உடனடியாக திருமண மண்டபங்கள் போன்ற இடங்களில் அவர்களை தங்க வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.


இது போன்ற காலகட்டங்களில் புரட்சித்தலைவி அவர்கள், மீட்புப்பணிகளில் ஈடுபடுகின்ற மாநகராட்சியை சேர்ந்த தொழிலாளர்களுக்கும், இதர களப்பணியாளர்களுக்கும் அவர்களுடைய அடிப்படை தேவைகளான குடிநீர், உணவு, தங்கும் இடம் போன்ற உதவிகளை தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். 


அதேபோன்று, தற்போதும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் அடிப்படை தேவைகளை உடனே பூர்த்தி செய்ய வேண்டும். தமிழகத்தில் பல இடங்களில் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக ஏராளமான விவசாய நிலங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்று இந்த அரசை கேட்டுக்கொள்கிறேன்.


கழகத் தொண்டர்கள் அனைவரும் தங்கள்பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அத்தியாவசிய தேவைகளான குடிநீர், உணவு, பால், மருந்து பொருட்கள் போன்ற உதவிகளை தங்களால் இயன்ற அளவுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இன்று சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் என கையெழுத்து போட்டுள்ளார்.


ALSO READ | சசிகலா சொல்லும் நரகாசுரன் யார்? அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் தீபாவளி வாழ்த்து


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR