அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அரியணை ஏறியிருக்கிறார். அதனைத் தடுப்பதற்கு பன்னீர்செல்வம் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்விகளை சந்திக்க அடுத்தது என்னவென்ற யோசனையில் இருக்கிறார் அவர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையே,சசிகலாவும் அதிமுக குறித்து பேச ஆரம்பித்திருக்கிறார். இன்று தஞ்சாவூரில் திவாகரன் ஆரம்பித்த அண்ணா திராவிட கழகத்தை அதிமுகவுடன் இணைக்கும் நிகழ்ச்சி நடந்தது.



அதில் பேசிய சசிகலா, “இன்று அண்ணா திராவிடர் கழகம் இணைந்துள்ளது. இதேபோல் பிரிந்து செயல்படும் அனைவரையும் ஒன்று சேர்த்து தமிழகத்தில் மிகப்பெரிய கட்சி நம் கட்சி என்று உருவாக்கும்வரை நான் ஓயமாட்டேன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் பயிற்சி பட்டறையில் படித்தவள் சொல்கிறேன், வீர தமிழச்சியாக சொல்கிறேன், நான் இருக்கின்றவரை அதிமுகவை யாரும் அபகரிக்கவோ, அழித்துவிடவோ முடியாது. 


திமுக எத்தனை கணக்கு போட்டாலும் அது பலிக்காது. அதிமுக வரலாற்றிலேயே ஆண்டுக்கு ஒருமுறை, கழகத்தின் விதிகளை யாருமே மாற்றியது இல்லை. ஆனால், தற்போது நடப்பது பெரிய கேலிக்கூத்தாக உள்ளது. அனைவரையும் ஒன்றிணைத்து கழகத்தை வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்வதுதான் என் எஞ்சிய வாழ்க்கை லட்சியம். 


மேலும் படிக்க | அதிமுக வங்கிக் கணக்கில் பரிவர்த்தனை கூடாது: வங்கிக்கு ஓபிஸ் கடிதம்


2016 டிசம்பர் மாதம் வரை நடந்தது மட்டும்தான் உண்மையான பொதுக்குழு. அதன் பின்னர் நடந்த அனைத்தையுமே நிர்வாகிகள் கூட்டங்களாகவே கட்சி தொண்டர்கள் கருதுகின்றனர்” என்றார்.


முன்னதாக, அதிமுகவின் வங்கி கணக்கு ஓ.பன்னீர்செல்வம் பெயரில் தற்போதுள்ளது. அதனை புதிய பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பெயருக்கு மாற்ற எடப்பாடி பழனிசாமி வங்கிக்கு கடிதம் கொடுத்ததாக தெரிகிறது.


மேலும் படிக்க | எவ்வளவு தெரியுமா கஷ்டப்பட்டேன் - புரட்சித் தலைமகன் பழனிசாமி புலம்பல்


அதனைத் தடுக்கும் விதமாக ஓ.பன்னீர்செல்வம் இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், பொருளாளராக தானே உள்ளதாகவும் தன்னை கேட்காமல் வரவு-செலவு கணக்கை மேற்கொண்டால் அதற்கு வங்கிதான் பொறுப்பு எனவும் கடிதம் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR