காணொளி காட்சி மூலம் சசிகலா விளக்கமளிக்க வேண்டும்; உயர்நீதிமன்றம்!
அந்நிய செலவாணி மோசடி வழக்கில் சசிகலா ஆஜராக தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!
அந்நிய செலவாணி மோசடி வழக்கில் சசிகலா ஆஜராக தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!
முன்னதாக அந்நிய செலவாணி மோசடி வழக்கில் சசிகலா ஆஜராக வேண்டும் என சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிரப்பித்தது. இந்த உத்தரவினை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
அந்நிய செலவாணி மோசடி தொடர்பாக சசிகலா மீது 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்கில் விசாரணையை 4 மாதத்தில் விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டப்பட்ட நிலையில், எழும்பூர் நீதிமன்றம் சசிகலா நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த உத்தரவின்படி., சொத்துகுவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று, பெங்களூரு பரப்பன அஹ்ரகார சிறையில் இருக்கும் சசிகலா, வரும் டிசம்பர் 13-ஆம் தேதி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என குறிப்பிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் மனு அளிக்கப்பட்டது. சசிகலாவின் மனுவினை விசாராத்த சென்னை உயர்நீதிமன்றம்., இந்த வழக்கில் சசிகலா நேரில் ஆஜராக தேவையில்லை எனவும், மாறாக காணொளி காட்சி மூலம் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.