எம்ஜிஆர் வீட்டில் சசிகலா மரியாதை, கண்களை மூடி தியானம்
ராமாவரம் எம்.ஜி.ஆர் இல்லத்தில் தியானத்தில் ஈடுபட்ட சசிகலா, பின்னர் பெங்களூரு புறப்பட்டுச் சென்றார்.
சொத்து குவிப்பு வழக்கில், சசிகலாவிற்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையை, சுப்ரீம் கோர்ட் நேற்று உறுதி செய்தது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மூவரும் உடனடியாக பெங்களூரு கோர்ட்டில் சரணடைய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரது தண்டனையை சுப்ரீம் கோர்ட் நேற்று உறுதி செய்தது. ஜெயலலிதா மறைந்ததால் அவரை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது.
மேலும் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா விதித்த 4 ஆண்டு சிறைத் தண்டனையையும் ரூ30 கோடி அபராதத்தையும் உறுதி செய்து ஐகோர்ட் நீதிபதிகள் பிசி கோஷ் மற்றும் அமித்வா ராய் ஆகியோர் நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தனர்.
தாங்கள் சரணடைய கால அவகாசம் கோரி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் இன்று சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தார் ஆனால் சுப்ரீம் கோர்ட் இந்த மனுவை நிராகரித்துள்ளது.
இந்நிலையில், உடல்நிலையை காரணம் கேட்டு, சரணடைய இரண்டு வார கால அவகாசம் கோரி சசிகலா தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வாய்மொழியாக கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதனை நிராகரித்த சுப்ரீம் கோர்ட், சசிகலா கோரிக்கையை ஏற்க முடியாது. தீர்ப்பில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. உடனடியாக பெங்களூரு கோர்ட்டில் சரணடைய வேண்டும் என கோர்ட் அதிரடியாக உத்தரவிட்டது.
இதனால் உடனடியாக பெங்களூரு சிறைக்கு செல்ல சசிகலா தயாராகி வருகிறார். முன்னதாக மெரினாவில் உள்ள மறைந்த ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று, அஞ்சலி செலுத்த திட்டமிட்டுள்ளார். அதன்பிறகு காரில் பெங்களூரு சிறைக்கு செல்கிறார்.
இந்த நிலையில் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைய சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் இன்று போயஸ் தோட்டத்தில் இருந்து கிளம்பினார்.
இந்நிலையில் இன்று பெங்களூரு செல்வதற்காக போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து புறப்பட்ட சசிகலா அங்கிருந்து மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்றார்.
அதன் பின்னர் ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவில்லத்திற்கு சென்ற அவர் அங்கிருந்த எம்.ஜி.ஆரின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
பின்னர் அங்கிருந்த எம்.ஜி.ஆரின் உருவப் படத்திற்கு கீழ் அமர்ந்து இரண்டு நிமிடங்கள் தியானம் செய்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு,போரூர் வழியாக பெங்களூர் சாலையை அடைந்தார்.