சுடிதாரில் சசிகலா: மீண்டும் வெளியானது மற்றொரு வீடியோ!!
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வரும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சிறைக்குள் சுடிதார் அணிந்து கொண்டு சுற்றி வரும் மற்றொரு வீடியோ வெளியாகி மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் கர்நாடக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறையில் சசிகலாவுக்கு பல வசதிகள் செய்து கொடுக்கப் பட்டுள்ளது எனவும், மேலும் கைதிக்கான உடையை அணியாமல் சாதரான உடையில் சசிகலா வலம் வருவதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், சிறை தண்டனை பெற்ற சசிகலா நைட்டியுடன் வலம் வருவதும், சிறையில் சசிகலாவுக்கு செய்து கொடுக்கப் பட்டுள்ள வசதிகளை மேற்கோள் காட்டி சசிகலாவின் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த பரபரபப்பு அடங்குவதற்குள் சசிகலா சுடிதார் அணிந்துகொண்டு சிறையில் இருந்து வெளியே சென்றுவிட்டு, சிறைக்கு திரும்பும் வீடியோ வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில் சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் இளவரசியும், சசிகலாவின் பின்னால் செல்வது அந்த வீடியோ காட்சியில் இடம் பெற்றுள்ளது.
அடுத்தடுத்து வீடியோ சர்ச்சையால் கர்நாடக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ:-