மதுரை:  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சாத்தான்குளம் (Sathankulam) கொலை சம்பவத்தை விசாரித்து வரும் சிபிஐ காவல் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு உள்ளது. காவலில் இறந்த தந்தை-மகன் கொலை வழக்குகள் தொடர்பான விசாரணைக்காக மேலும் மூன்று போலீஸ் அதிகாரிகளை மூன்று நாள் காவலில் எடுத்து மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) விசாரணை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த மூன்று பேர் விவரங்கள் பின்வருமாறு, ஹெட் கான்ஸ்டபிள் சாமிதுரை, கிரேடு -1 கான்ஸ்டபிள்கள் வெயில்முத்து மற்றும் செல்லதுரை ஆவார்கள். இவர்களை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ கோரிக்கை வைத்தது. ஆனால் மூன்று நாட்கள் மட்டுமே வழங்கிய தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் (சி.ஜே.எம்-மதுரை) டிவி ஹேமானந்த குமார், இந்த மூன்று பேரையும் ஜூலை 23 மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார்.


இதற்கு முன்பாக ஐந்து காவல்துறை அதிகாரிகளை சிபிஐ (CBI Police) காவலில் எடுத்து விசாரணை செய்தத. அவர்கள், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர்; துணை ஆய்வாளர்கள் ரகு கணேஷ் மற்றும் பாலகிருஷ்ணன். தலைமை கான்ஸ்டபிள்கள் முத்துராஜ் மற்றும் முருகன் ஆகியோர் ஜூலை 14 அன்று காவலில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு, ஜூலை 17 அன்று நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


ALSO READ | சாத்தான்குளம் வழக்கு: சாட்சியாக இருக்கும் பெண் காவலருக்கு போலீஸ் பாதுகாப்பு


பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சாத்தான்குளத்தில் (Sathankulam Custodial Death) காவலில் இறந்ததாகக் கூறப்படும் தந்தை-மகன் இரட்டையரின் கொலை வழக்கை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை (Madras High Court Madurai Bench) தானாகவே முன்வந்து ஏற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


சாத்தான்குளத்தில் என்ன நடந்தது?
சாத்தான்குளம் (Sathankulam) ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஜே பென்னிக்ஸ் ஆகியோர், ஊரடங்கு விதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் விசாரணை என்ற பெயரில். கொடூரமாக தாக்கியதால், அவர்கள் போலீஸ் காவலில் இறந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.


ALSO READ | தந்தை-மகன் கொலை வழக்கு: ஜூலை 28-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய CBI, CBCID-க்கு நீதிமன்றம் உத்தரவு