சதுரகிரி: சித்திரை பிரதோஷம் அமாவாசை வழிபாட்டுக்கு 4 நாட்கள் அனுமதி
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சித்திரை மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை முன்னிட்டு பக்தர்கள் மலையெறி சென்று சாமி தரிசனம் செய்ய நான்கு நாட்கள் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
சதுரகிரிக்கு அனுமதி
சித்திரை மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி வருகிறது. இதனையொட்டி, வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெற இருக்கிறது. இதற்கு பக்தர்களை அனுமதிக்க அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையொட்டி ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் ஏப்ரல் 10 ஆம் தேதி வரை பக்தர்கள் சதுரகிரி மலையில் இருக்கும் சுந்திரமகாலிங்கேஸ்வரரை தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் அனுமதி கொடுத்துள்ளது.
மேலும் படிக்க | முன்னாள் இந்துக்களே இப்போதைய இஸ்லாமியர்கள் - அமைச்சர் பொன்முடி
இவர்களுக்கெல்லாம் அனுமதியில்லை
காய்ச்சல் சளி,இருமல் உள்ளவர்கள் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். 10 வயதுக்குள் உட்பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி கிடையாது. அதேபோல் காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும். கோவிலுக்கு வருபவர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீர் ஓடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவில் தங்க அனுமதி இல்லை. அனுமதிக்கப்பட்ட நாட்களில் பலத்த மழையோ அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தாலோ பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு கட்டுப்பாடு
தற்போது கோடைகாலம் என்பதால் பக்தர்கள் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களைக் கொண்டு செல்ல கூடாது. மேலும், தடை செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதி இல்லை. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது. கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். வனத்துறை கொடுத்திருக்கும் கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுரைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் பக்தர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | கரூர்: பைனான்சியரை ஏமாற்றிய கல்யாண ராணி - டிக்டாக்கில் போட்ட ஸ்கெட்ச்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ