ஒருங்கிணைப்பாளர்கள் என குறிப்பிட்டது ஏன்?... அதிமுக விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்
அதிமுக அலுவலகத்திற்கு ஒருங்கிணைப்பாளர்கள் என குறிப்பிட்டு கடிதம் அனுப்பியது ஏன் என்பது தொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கமளித்திருக்கிறார்.
அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்-இபிஎஸ் என பிளவுபட்டுள்ளது. இதனையடுத்து அதிமுக யாருக்கு சொந்தம்? என இரு தரப்பும் போட்டி போட்டு வருகின்றனர். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் தான் தான் என இபிஎஸ்ம், ஒருங்கிணைப்பாளர் நான் தான் என ஓபிஎஸ்ம் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இந்த வழக்கானது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க தேர்தல் ஆணையம் வடிவமைத்த ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து விளக்கம் அளிக்க அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது.
ஏற்கனவே பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என குறிப்பிட்டு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ் அணி, தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்தது. இதனையடுத்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு கடிதம் அனுப்பியது.
இந்த கடிதம் நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது. அப்போது தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட பதவிகளில் யாரும் இல்லை என கூறி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பிய கடிதத்தை அதிமுக தலைமை அலுவலக நிர்வாகிகள் பெற்றுக் கொள்ள மறுத்து, திருப்பி அனுப்பினர்.
மேலும் படிக்க | தூத்துக்குடியில் புத்தாண்டு கொண்டாட்டம்... அவதார் டைனோசர் பொம்மைகளின் ஊர்வலம்!
இந்நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்த தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, “டெல்லியில் இருந்து இந்திய தேர்தல் ஆணையம் கொடுத்த ஆவணங்களின் படியே அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என பெயர் போட்டு ராயப்பேட்டை அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | ஒசூரில் புத்தாண்டு கொண்டாட்டம்: ஆஞ்சநேயர் கோயிலில் கடலைக்காய் திருவிழா
மேலும் படிக்க | மதவாத சக்திகளுக்கு இடம் அளிக்கக்கூடாது - முதலமைச்சரின் புத்தாண்டு வாழ்த்து
மேலும் படிக்க | பேனா வைக்க நிதி இருக்கு ஊதியம் கொடுக்க நிதி இல்லையா?... டிடிவி தினகரன் கேள்வி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ