SBI's Electoral Bond Details: உச்சநீதிமன்றத்தின் கெடுபிடியான தீர்ப்புக்குப் பிறகு எஸ்பிஐ வங்கி தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்துள்ளது. அதில் அரசியல் கட்சிகளுக்கு யார் யார் நன்கொடை அளித்தார்கள் என்ற விவரமும், அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை தொகையும் இருக்கிறதே தவிர யார் எந்த கட்சிக்கு எந்த தேதியில் எந்த தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை அளித்தார்கள் என்ற விவரம் இல்லை. தேர்தல் பத்திரங்களுக்கான சீரியல் எண்ணும் அதில் இடம்பெறவில்லை. எஸ்பிஐ கொடுத்திருக்கும் தேர்தல் பத்திர விவரங்களின்படி, குறிப்பிட்ட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்தவர்களின் விவரங்களை அவ்வளவு எளிதாக கண்டுபிடிக்க முடியாது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தேர்தல் பத்திரம் விவரங்கள் வெளியீடு... சந்தேகத்தை கிளப்பும் நன்கொடைகள்...!


அதேபோல்,  2019 ஏப்ரல் 12ஆம் தேதி முதல் 2024 பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி வரை விற்பனை செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விபரங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. மார்ச் 2018 முதல் மார்ச் 2019 ஆம் ஆண்டு வரை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்தவர்களின் விவரங்கள் இடம்பெறவில்லை. இந்த காலகட்டத்தில் 2,500 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் விற்பனையானது. அந்த காலகட்டத்தில் நன்கொடை அளித்தவர்களின் விவரங்கள் வெளியானால் இன்னும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிச்சத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இப்போது வரை தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகம் நன்கொடை பெற்ற கட்சியாக பாஜக இருக்கிறது. அரசியல் கட்சிகளுக்கு அதிக நன்கொடை அளித்தவர்களில் லாட்டரி அதிபர் மார்டின் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். பெரும்பாலான நன்கொடை செலுத்தியவர்கள் எல்லாம் தங்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடந்த பின்னர் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிக்கு நன்கொடை அளித்தவர்களாக இருக்கிறார்கள். 


தேர்தல் பத்திரங்கள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு வரை யார் எந்த அரசியல் கட்சிக்கு எவ்வளவு நன்கொடை அளிக்கிறார்கள் என்ற விவரம் பொதுமக்களுக்கு தெரியும். ஆனால், 2017 ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக, தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தது. இதன் மூலம் யார் எந்தக்கட்சிக்கு எவ்வளவு நன்கொடை அளிக்கிறார்கள் என்ற விவரம் பொதுவெளியில் தெரியாது. இது ஒரு ஊழல் சட்டம் என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்த நிலையில், இந்த சட்டத்தை எதிர்த்து தான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


அந்த வழக்கில் தேர்தல் பத்திர விவரங்களை எஸ்பிஐ வங்கி தேர்தல் ஆணையத்துக்கு மார்ச் 12 ஆம் தேதி மாலைக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இதற்கு காலவகாசம் வேண்டும் என எஸ்பிஐ வைத்த கோரிக்கையையும் உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இதனையடுத்து தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை வழங்கியவர்களின் விவரங்களையும், எந்தக் கட்சி எவ்வளவு நிதி பெற்றது என்ற விவரங்களையும் தனித்தனியாக எஸ்பிஐ வங்கி, தேர்தல் ஆணையத்திடம் வழங்கியது. இந்த விவரத்தை இப்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.


மேலும் படிக்க | 'தேர்தல் தேதி நாளை அறிவிப்பு?' அவசரமாக நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர்கள் - பின்னணி இதுதான்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ