நீட் 2017: அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பான வழக்கை உடனே விசாரிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வான ‘நீட்’ தேர்வானது, பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே கடந்த மே 7-ம் தேதி நடத்தப்பட்டது. நீட் தேர்வு முடிவுகளை ஜுன் மாதம் வெளியிடவும் முடிவு செய்யப்பட்டிருந்தது.
இந்தநிலை நீட் தேர்வில் பல்வேறு குளறபடி நடந்துள்ளதால் அந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் இதனை அவரச வழக்காக எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு தொடுக்கப்பட்டது.
இதனிடையே "நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பான வழக்கை உடனே விசாரிக்க முடியாது என்று கூறிய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அவசர வழக்கு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவித்துள்ளனர்.
மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திருச்சியைச் சேர்ந்த சக்தி மலர்கொடி என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
முன்னதாக நீட் தேர்வில் ஒரே மாதிரியான வினாக்கள், அனைத்து வினாத்தாள்களிலும் இடம்பெறவில்லை என்பதால் இதனை பொது நுழைவுத் தேர்வாக கருத முடியாது. எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திருச்சியைச் சேர்ந்த சக்தி மலர்கொடி என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த நிலையில் நீட் தேர்வை ரத்து செய்யும் வழக்கை அவசரமாக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் நீட் தேர்வு தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் அதை விசாரிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது.
மேலும் வரும் 7-ம் தேதி சி.பி.எஸ்.சி செயலாளர் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் ஆகியோர் கோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்களிக்க வேண்டும் எனவும் நேற்று உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடதக்கது.