புதிய ரேஷன் கார்டு : இப்போது விண்ணப்பித்தால் எப்போது கிடைக்கும்? முக்கிய தகவல்

New Ration Card | புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தால் எப்போது குடும்ப அட்டை பயனாளிகளுக்கு கிடைக்கும் என்ற முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

New Ration Card tamil | புதிய ரேஷன் கார்டுக்கு ஏற்கனவே விண்ணப்பித்து பலரும் காத்திருக்கும் நிலையில், இப்போது புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தால் எப்போது கிடைக்கும்? என்ற முக்கிய தகவல் குறித்து பார்க்கலாம். 

 

1 /8

தமிழ்நாடு அரசு புதிய ரேஷன் கார்டு விநியோகம் மிகவும் மெதுவாகவே நடந்து வருகிறது. புதிய ரேஷன் கார்டு கொடுப்பதில் அரசுக்கு பல்வேறு நெருக்கடிகள் எழுந்திருக்கிறது. இதன் காரணமாக புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் அப்படியே நிலுவையில் வைக்கப்படுகின்றன.   

2 /8

இந்த ஆண்டு ஜூன் மாதம் முன்பாக விண்ணப்பித்தவர்களுக்கே இன்னும் ரேஷன் கார்டு கிடைக்கவில்லை. ஆவணங்கள் சரியாக இருந்து, அதிகாரிகளின் கள ஆய்வில் விண்ணப்பதாரரின் தகவல்கள் அனைத்தும் உண்மையென உறுதி செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் புதிய ரேஷன் கார்டு விநியோகம் நடக்கிறது. அதுவும் ஜூன் மாதத்துக்கு முன்பாக விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே.

3 /8

அதில்கூட, ஆன்லைனில் விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டு இன்னும் கிடைக்கவில்லை. கள ஆய்வு உள்ளிட்டவை அவர்களுக்கு இன்னும் நிலுவையிலேயே இருக்கிறது. ஜூன் மாதம் 20 ஆம் தேதிக்கு பிறகு புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்திருந்தால், அந்த விண்ணப்பம் பரிசீலனையில் கூட எடுத்துக் கொள்ளப்படவில்லை.

4 /8

முதல் கட்டத்திலேயே ரேஷன் கார்டு விண்ணப்பம் நிலுவையில் இருக்கிறது. அதனால், இப்போது விண்ணப்பிப்பவர்களுக்கு கிட்டதட்ட 6 மாதங்களுக்கு முன்பாக ரேஷன் கார்டு கிடைக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் பொங்கல் பண்டிகை வருகிறது. அந்த பண்டிகையின்போது ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு கொடுக்க வேண்டியிருக்கிறது.  

5 /8

புதிய ரேஷன் கார்டு கொடுத்தால் பொங்கல் பரிசு செலவு அரசுக்கு அதிகரிக்கும். அத்துடன் ரேஷன் கார்டு வாங்கியவர்கள் உடனே மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கிறார்கள். அந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இதனால் ஏற்படும் நெருக்கடிகளை சமாளிக்கவே ரேஷன் கார்டு விநியோகத்தை தமிழ்நாடு அரசு மிக மிக மெதுவாக மேற்கொண்டு வருகிறது.   

6 /8

விரைவில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புகள் வர இருக்கிறது. புது ரேஷன் கார்டு கொடுத்தால் அவர்கள் உடனே மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் பரிசீலனையில் இருக்கிறது, அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் ஆளும்கட்சி நிர்வாகிகளிடம் வலியுறுத்துவார்கள். அதுவும் அரசுக்கும், தேர்தல் களத்திலும் நெருக்கடியை உருவாக்கும்.  

7 /8

அதனால் இப்போதைக்கு புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு, உடனே ரேஷன் கார்டு கிடைப்பது கடினம். குறிப்பாக ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்களுக்கு ரேஷன் கார்டு கிடைப்பது என்பது இன்னும் கூடுதல் காலதாமதம் கூட ஆகலாம். ஆப்லைனில் விண்ணப்பித்தவர்கள் சீக்கிரம் புதிய ரேஷன் கார்டு பெறுகிறார்கள். 

8 /8

இது தொடர்பான அதிருப்தியும் மக்கள் மத்தியில் இருக்கிறது. ஆப்லைனில் நேரடியாக புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் உடனடியாக அதிகாரிகளின் பரிசீலனைக்கு செல்வதாகவும், ஆன்லைனில் விண்ணப்பித்தவர்களின் ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் அப்படியே நிலுவையில் வைக்கப்படுவதாகவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிப்பவர்கள் சூழலை பரிசீலனை செய்து எப்படி விண்ணப்பிக்கலாம் என முடிவெடுத்து புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கவும்.