கனமழை காரணமாக நாளையும், நாளை மறுநாளும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
புதுச்சேரிக்கு ரெட் அலர்ட். புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும், நாளை மறுநாளும் விடுமுறை.
புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, அங்கு உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும், நாளை மறுநாளும் (10,11 ஆம்தேதிகள்) விடுமுறை என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
கொரோனா பரவல் குறைந்ததன் காரணமாக கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை புதுவையில் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
1 முதல் 8 ஆம் வகுப்பு வரை கடந்த 8 ஆம் தேதி முதல் அரைநாள் சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தொடர் மழையால் நவம்பர் 8, 9 ஆம் தேதிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
ALSO READ | ஆற்றிற்கு குளிக்கச் செல்வது செல்பி எடுக்க செல்வதை தவிர்க்குமாறு வேண்டுகோள்!
இந்நிலையில் கனமழை பொழியும் என ரெட் அலர்ட் புதுச்சேரிக்கு விடப்பட்டுள்ளது. அதனால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும், நாளை மறுநாளும் (10,11ம் தேதிகளுக்கு) விடுமுறை அளிக்கப்படுவதாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
முன்னதாக வங்கக் கடலில் உருவான சூறாவளி காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் நேற்று (திங்கள்கிழமை) இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், தொடர்ந்து மழை பெய்து வருவதால், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து மழை பெய்து வரும் புதுச்சேரியில் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையில், எதிர்க்கட்சியான திமுக தலைவர் ஆர்.சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில், கனமழையால் பல பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்ததாகவும், வீடுகள் இடிந்து விழுந்தவர்களுக்கு தலா ரூ. 20,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் புதுச்சேரி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
ALSO READ | சென்னை மாநகராட்சியை எச்சரித்த சென்னை உயர் நீதிமன்றம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR