ஆற்றிற்கு குளிக்கச் செல்வது செல்பி எடுக்க செல்வதை தவிர்க்குமாறு வேண்டுகோள்!

மேட்டூர் அணையில் இருந்து 20 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால், ஆற்றிற்கு குளிக்கச் செல்வது செல்பி எடுக்க செல்வது ஆகியவற்றை தவிர்க்குமாறு பொதுமக்களை சேலம் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 9, 2021, 02:29 PM IST
ஆற்றிற்கு குளிக்கச் செல்வது செல்பி எடுக்க செல்வதை தவிர்க்குமாறு வேண்டுகோள்! title=

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சேலம் ஈரோடு இடையே படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் (Salem District Collector S. Karmegam) தெரிவித்துள்ளார். 

மேட்டூர் அணையின் (Mettur Dam) நீர்மட்டம் இன்று காலை 119 அடியாக அதிகரித்த நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து 20 ஆயிரம் கனஅடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதன்காரணமாக காவிரிக்கரை பகுதிகளான பூலாம்பட்டி கல்வடங்கம் தேவர் உள்ளிட்ட இடங்களில் காவிரி ஆறு கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றில் அதிக அளவு நீர் செல்வதால் பூலாம்பட்டி பகுதியில் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் பூலாம்பட்டியில் இருந்து ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டைக்கு படகுப் போக்குவரத்து காவிரி ஆற்றில் வழக்கமாக நடைபெற்று வருகிறது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மறு அறிவிப்பு வரும் வரை இந்த படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே பூலாம்பட்டி பகுதியில் வெள்ள தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காவிரிக் கரையை ஒட்டிய வீடுகளுக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் பேசிய அவர் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொண்டார். ஆற்றிற்கு குளிக்கச் செல்வது செல்பி எடுக்க செல்வது ஆகியவற்றை தவிர்க்குமாறு பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

ALSO READ |  சென்னை மாநகராட்சியை எச்சரித்த சென்னை உயர் நீதிமன்றம்!

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மேட்டூர் அணையில் இருந்து 20 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதாகவும் தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி மேட்டூர் அணையின் நீர்மட்டத்தை 119 அடியாக நிறுத்தி வைத்துள்ளதாகவும், நீர் வரத்தைப் பொறுத்து அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் கார்மேகம் தெரிவித்தார்.

கூடுதலாக 2 டிஎம்சி தண்ணீர் வரை மேட்டூர் அணையில் சேமிக்க முடியும் என்று கூறிய மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஒரே நேரத்தில் கூடுதல் தண்ணீரை வெளியேற்றாமல்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று காலை முதல் மேட்டூர் அணையிலிருந்து 20 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதாகவும் சேலம் மாவட்டத்தின் காவிரி கரைகளில் பொதுமக்களுக்கு உரிய எச்சரிக்கை அளிக்கப்பட்டு துணை ஆட்சியர் அந்தஸ்திலான அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் ஆட்சியர் கார்மேகம் செய்தியாளர்களிடம் கூறினார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காரணத்தினால் நேற்று 118 அடியை கடந்த நிலையில் அணையின் முழு கொள்ளளவான (Full Reservoir Level) 120 அடியை எட்டும் நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீரை முழுவதும் அப்படியே வெளியேற்ற மாவட்ட ஆட்சியர் நேற்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ |  செல்பி மோகத்தால் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன்; தேடும் பணி தீவிரம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News