புத்தகம் அச்சடிக்கும் பணி தாமதம்; அடுத்த மாதம் தான் புத்தகம் கிடைக்கும்: கல்வி அமைச்சர்
இந்த மாதம் இறுதிக்குள் அனைத்து புத்தகமும் அச்சடிக்கப்பட்டு 28 முதல் 30 ம் தேதிக்குள் அனைத்து மாவட்ட கல்வி அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகத்திற்கு புத்தகங்கள் வந்துவிடும்.
சென்னை: ஊரடங்கு காரணமாக (Corona Lockdown) புத்தகம் அச்சடிக்கும் பணி தாமதமாகி உள்ளதால், இந்த மாதம் இறுதிக்குள் அனைத்து புத்தகமும் அச்சடிக்கப்பட்டு 28 முதல் 30 ம் தேதிக்குள் அனைத்து மாவட்ட கல்வி அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகத்திற்கு புத்தகங்கள் வந்துவிடும். அதன்பிறகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஒப்புதல் பெற்று மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக பள்ளி (TN School) கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் (KA Sengottaiyan) அறிவித்துள்ளார்.
இந்த செய்தி குறித்து அவர், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்வுகளை மூன்று முறை ஒத்தி வைத்த தமிழக அரசாங்கம் (TN Govt) இறுதியாக முக்கிய முடிவை எடுத்தது. மேலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என அறிவித்தது. தற்போது இன்னும் புத்தகம் அச்சடிக்கப்படவில்லை என்ற செய்தி தமிழக பள்ளிகல்வித்துறை எவ்வளவு மெத்தனமாக செயல்படுகிறது என்பதை காட்டுகிறது.
முன்னதாக, . நீண்ட குழப்பத்திற்கு பிறகு மாணவர்களின் நலன் கருதி 10 ஆம் வகுப்பு (Class 10 Exams) மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K Palaniswami) அறிவித்தார்.
ஜூன் 9 செவ்வாயன்று தலைமை செயலகத்தில் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி (Edappadi K Palaniswami), ஜூன் 15 முதல் தேர்வுகள் எழுத வரிசையில் இருந்த அனைத்து மாணவர்களும் 11 ஆம் வகுப்புக்கு உயர்த்தப்படுவார்கள் என்று கூறினார். மேலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 80% மதிப்பெண்கள் காலாண்டு மற்றும் அரை ஆண்டு தேர்வுகளில் அவர்களின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் மற்றும் அவர்களின் வருகையின் அடிப்படையில் 20% மதிப்பெண்கள் வழங்கப்படும்