அதிகாலை முதல் கனமழை... பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு
School, Colleges Leave: அதிகாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், இரண்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் நேற்று முன்தினம் (பிப். 4) நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, நேற்று (பிப். 3) தென்மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை இன்று (பிப். 4) பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டது. நாளை (பிப். 5) முதல் பிப். 7ஆம் தேதிவரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் கணிக்கப்பபட்டது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும் கூறப்பட்டது.
மேலும் படிக்க | திருவாரூரில் பேய் மழை..1லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்
இந்நிலையில், அதிகாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சில மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இன்று சனிக்கிழமை என்றாலும், பல பள்ளி, கல்லூரிகள் செயல்பட இருந்தன. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கனமழை பெய்யும் மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக காலை முதல் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ