Chennai Rains Latest News Updates: சென்னையில் நேற்று இரவு முதல் நகரின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் அவசரகால செயல்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி  ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடன் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், மா.சுப்பிரமணியன் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ராஜேஷ் லக்கானி மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை செயலாளர் அமுதா மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் குமரகுருபரன் உள்ளிட்டோர் இருந்தனர். 


சோழிங்கநல்லூரில் அதிக மழை


முன்னதாக மாநகராட்சி அலுவகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுபாடு மையத்ததை பார்வையிட்ட நிலையில், அடுத்து எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.


மேலும் படிக்க | Chennai Rain: எந்தெந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல்? எங்கெல்லாம் மழைநீர் தேங்கி நிற்கிறது?


அப்போது மாநில அவசரகால செயல்பாடு மையத்தில் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து துணை முதலமைச்சர் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது,"சென்னையில் 24 மணி நேரத்தில் 46.48 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.  அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 6.1 சென்டிமீட்டர் மழையும், தேனாம்பேட்டையில் 6.1 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. 


சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இதுவரை 8 மரங்கள் காற்றின் வேகம் காரணமாக முறிந்து விழுந்துள்ளது. 1000 நபர்கள் தங்கும் வகையில் 300 எண்ணிக்கையிலான நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.


சுரங்கப்பாதைகள்


35 சமையல் அறை மையங்கள் தயார்நிலையில் உள்ளது. சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் 20 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லை (அப்டேட்: தற்போது இதில் 5 சுரங்கப்பாதைகள் மழைநீர் புகுந்ததால் மூடப்பட்டுள்ளன) 



கணேசபுரம், பெரம்பூர் சுரங்கப்பாதைகள் மழைநீர் தேக்கம் காரணமாக மூடப்பட்டுள்ளது. அங்கும் தேங்கி உள்ள மழை நீரை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. 300க்கும் மேற்பட்ட இடங்களில் நீர் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. 24 மணி நேரத்தில் சென்னை முழுவதும் எங்கேயும் மின்தடை என்பது இல்லை. கடந்த 12 மணி நேரத்தில் 1500 அழைப்புகள் சென்னை மாநகராட்சியில் உள்ள கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்துள்ளது. இதில் 600 அழைப்புகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 


முதல்வர் அறிவிப்பார்


நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக முதலமைச்சர் முடிவெடுப்பார், அதுகுறித்து மாலைக்குள் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். சென்னையில் நிவாரண பணிக்காக 89 படகுகள், பிற மாவட்டங்களில் 130 படகுகள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளது.


931 மையங்கள் நிவாரண பணிக்காக தயார் நிலையில் உள்ளது. சென்னையில் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் மழை வெள்ள பாதிப்பு கண்காணிக்க நோடல் ஆபீஸர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மழை வெள்ள பாதிப்பை உணர்ந்து 100 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.


முகாம்கள் ரெடி


சென்னையில் 13,000 தன்னார்வலர்கள் சுகாதார பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 65 ஆயிரம் தன்னார்வலர்கள் உள்ளனர். தேவைப்படும் போது அவர்கள் சென்னை அழைத்து வருவார்கள் என தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக கன மழை பெய்யும் என்பதால் முன்கூட்டியே தேசிய பேரிடமிருந்து படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 


தற்போது வரை முகாம்களை தங்க வைக்கக்கூடிய அளவுக்கு மழை பாதிப்பு இன்னும் ஏற்படவில்லை" என்றார். மேலும், தொலைதொடர்பு நிறுவனங்கள் இடம் பேசி உள்ளோம். அதனால் தொலைபேசி அழைப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாது என வருவாய் மற்றும் மேலாண்மை ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.


ரெட் அலர்ட்: விடுமுறை அறிவிப்பு எப்போது?


தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும் நாளை (அக். 16) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. இன்று சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது சென்னைக்கு மட்டும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் தொடர் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளது. 


இதனால், சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும், நாளை மறுதினமும் விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்படுகிறது. இன்று மாலை ஆலோசனைக்கு பிறகு முதலமைச்சர் அறிவிப்பார் என கூறப்படும் நிலையில், அடுத்த இரண்டு நாள்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  


மேலும் படிக்க | Chennai Rains: நள்ளிரவிலும், காலையிலும் கனமழை - சென்னை இப்போது எப்படி இருக்கிறது?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ