சென்னை: 4 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட பணிகளை ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தொடங்கி வைத்த தமிழக பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் (K. A. Sengottaiyan), பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தனியார் பள்ளிகள் 100 சதவீதம் கல்வி கட்டணம் (School Fees) செலுத்த வேண்டும் என பெற்றோரை வற்புறுத்தினால், அந்த பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர்களின் கல்வி கட்டணம் குறித்து இதுவரை ஒரே ஒரு புகார் மட்டுமே வந்துள்ளதாக அமைச்சர் (School Education Minister) செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


ALSO READ |  பள்ளிகளை திறக்க தற்போது சாத்தியமில்லை.. இனி ஆன்லைன் வகுப்பு: அமைச்சர்


கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 40 சதவீதம் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும், அதையும் மீறி முழு கட்டணமும் வசூலித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாவட்ட கல்வி அலுவலக அதிகாரிகளிடம் பொற்றோர்கள் புகார் தெரிவிக்கலாம் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.


தமிழகத்தில் கொரோனா (Coronavirus) பரவல் கட்டுக்குள் வந்தபிறகு பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் எனவும் கூறினார். 


NEET தேர்வு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே தமிழக அரசின் கொள்கை முடிவாகும் எனக் கூறினார்.


ALSO READ | ஏன் இவ்வளவு பிடிவாதம்? NEET/JEE தேர்வுகளை ஒத்திவைக்க மோடி உத்தரவிட வேண்டும்


பத்தாம் வகுப்புத் தனித்தேர்வர்கள் எழுத விரும்பும் மாணவர்கள் வரும் 27 ஆம் தேதி வரை ஆன்லைன் (Online Exam) மூலமாக விண்ணப்பிக்கலாம். எத்தனை பேர் விண்ணப்பிக்கிறார்கள் என்பதைப் பொறுத்துத் தேர்வுகள் நடத்தப்படும் எனவும் கூறினார்.