தொடக்கப்பள்ளி மாணவர்களின் அவலநிலை; 15 ஆண்டுகளாக மதிய உணவு கிடைக்கவில்லை
குரும்பலூர் பள்ளிக்கு குரும்பலூர், தடுத்தான் பாளையம், ஏரிக்கரை ஆகிய பகுதிகளில் இருந்து மாணவர்கள் வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கல்வராயன் மலைப் பகுதியில் அமைந்துள்ளது குரும்பலூர் கிராமம் இந்த கிராமத்திற்கென கடந்த 2006-ஆம் ஆண்டு அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. இப்பள்ளியில் சுமார் 30 மாணவர்கள் மட்டுமே பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளி ஓராசிரியர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகும்.
இந்தப் பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி என்பதால் பழங்குடியினர் நலத்துறையில் வராது. அதனால் இந்தப் பள்ளி உண்டு உறைவிட பள்ளியாக இயங்கவும் முடியாது. மேலும் தொடக்கத்தில் இருந்தே இப்பள்ளியில் மதிய உணவு திட்டத்தின் கீழ் உணவு வழங்கப்படுவதில்லை . இந்த பள்ளி மாணவர்களுக்கு மதியஉணவு கிடைத்திட சுமார் 15 ஆண்டுகளாக, இந்த கிராம மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் கல்வி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
குரும்பலூர் பள்ளிக்கு குரும்பலூர், தடுத்தான் பாளையம், ஏரிக்கரை ஆகிய பகுதிகளில் இருந்து மாணவர்கள் வருகின்றனர். இந்த மாணவர்கள் மதியம் சாப்பிட வீட்டுக்கு சென்றால் மீண்டும் பள்ளிக்கு வருவது மிகவும் கடினம். ஏனென்றால் இந்த மலைகிராம மக்கள் அதி காலையில் வேலைக்கு சென்றால் மாலையில் தான் வீடு திரும்புகிறார்கள்.
இதனாலும் இந்த மாணவர்களுக்கு சரிவர மதிய உணவு கிடைப்பதில்லை என்று கூட சொல்லலாம் இதை உணர்ந்த பள்ளியின் தலைமையாசிரியர் கப்ரியல் கடந்த மூன்று ஆண்டுகளாகவே தனது சொந்த செலவில் மதிய உணவு வழங்கி வருகிறார்.
இதனைப் போன்று கல்வராயன் மலைப் பகுதியில் இருக்கும் பல தொடக்கப்பள்ளியில் மதிய உணவு சரிவர வழங்கப்படுவதில்லை. மேலும் இப்பள்ளி மாணவர்களுக்கென கழிப்பறை வசதியும் இல்லை. விளையாட்டு மைதானங்களும் இல்லை. விளையாட்டுப் பொருட்களும் இல்லை.
இப்பள்ளியில் மேலும் மாணவர்களுக்கு நவீன முறையில் கற்பிக்க எந்த ஒரு உபகரணங்களும் இல்லை. மேலும் ஆனால் இந்த ஊரில் மிகப்பெரிய சத்துணவு கட்டிடம் மட்டும் காட்சிப் பொருளாக உள்ளது. மேலும் கல்வராயன்மலை பகுதியில் மொத்தம் 175 மலை கிராமங்கள் உள்ளன. இதில் இருபத்தோரு தொடக்கப்பள்ளிகள் மட்டுமே இயங்கி வருகிறது.
இதனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வியில் பின் தங்கிய பகுதியாக உள்ளது கல்வராயன் மலைப் பகுதி மேலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் இந்த மாணவர்களுக்கு அரசு சார்பில் மதிய உணவு கிடைத்திட நடவடிக்கை வேண்டும். அப்படி இல்லையென்றால் கல்வராயன் மலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிகளை மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி ஆக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வராயன் மலை கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மேலும் படிக்க | கடத்தப்பட்ட 3 மணிநேரத்தில் மீட்கப்பட்ட பள்ளி மாணவி; அசத்திய சென்னை போலீஸ்
தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளில் கல்விக்கண் திறந்த காமராஜர் ஏழை எளிய மாணவர்களுக்கென மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தார் . ஆனால் காமராஜரின் கனவு திட்டமான மதிய உணவு திட்டம் இன்னும் சில மலை கிராமங்களில் இந்தத் திட்டம் நடைமுறையில் இல்லை என்பதே பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR