கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சோழம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் சுமார் 130க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளிக்கு நெடுமானுர், காட்டுக்கொட்டாய், கூட்டுரோடு, மணக்காடு, மூரார்பாளையம் உள்ளிட்ட  கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் இருந்து கரடுமுரடான பாதைகளையும், காட்டு வழிகளிலும் கடந்து பள்ளிக்கு வந்து செல்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதை பார்த்த தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றுக் கொண்ட கந்தசாமி ஆசிரியர், பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சக ஆசிரியர்களிடம் இது பற்றி பேசியுள்ளார்.


பின்பு ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்த மாணவர்களின் வருகைப் பதிவு குறையாமல் இருப்பதற்காகவும், மாணவர்களின்  பாதுகாப்பு குறித்தும் தங்களது சொந்த செலவில் காலையிலும், மாலையிலும் மாணவர்கள் சிரமமின்றி பள்ளிக்கு வந்து செல்வதற்கு போக்குவரத்து வசதியாக ஆட்டோ ஒன்றை ஏற்பாடு செய்ய முடிவெடுத்துள்ளனர்.



மேலும் படிக்க | முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது வழக்குப்பதிவு; ரெய்டு எங்கெங்கே


அந்த வகையில்தான் மூரார்பாளையத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவரை நியமித்து, நெடுமனூர், கூட்ரோடு, காட்டுக்கொட்டாய், மணக்காடு, மூரார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவ மாணவிகளை  ஆட்டோவில் காலையிலும், மாலையிலும் பள்ளிக்கு அழைத்துவந்து அழைத்துச்செல்ல, மாதம் 5,000 ரூபாய் தருகிறோம் என கூறியுள்ளனர். 


இந்த நிலையில் மாணவர்களின் எதிர்காலத்தில் தனக்கும் சிறிய பங்கு இருக்க வேண்டும் என்பதற்காக 5 ஆயிரம் ரூபாய் வேண்டாம், மாதம் 3 ஆயிரம் போதும் என ஒப்புக்கொண்டு மாணவர்களின் பள்ளி படிப்பிற்காக தனது ஆட்டோ பணியை மகிழ்ச்சியுடன் மெற்கொண்டு, பள்ளி மாணவர்களை அழைத்து சென்று வருகிறார் ஆட்டோ ஓட்டுநர் வேல்முருகன்.



மேலும் மாணவர்களின் பாதுகாப்புக்காக ஆட்டோ வசதி ஏற்படுத்திக் கொடுத்த ஆசிரியர்களின் இந்தக் கூட்டு முயற்சிக்கு அந்த பகுதியில் உள்ள மாணவர்களின் பெற்றோர்கள், பொதும் மக்கள் என அனைவரும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களும், நன்றியும் தெரிவித்து வருகின்றனர்.



மேலும் இதற்கு உறுதுணையாக இருந்து வரும் ஆட்டோ ஓட்டுனர் வேல்முருகனையும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.


மேலும் படிக்க | சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்; 3 பேர் மீது காவல்துறை வழக்குபதிவு!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR