உற்சாகமாக பள்ளிக்கு வந்த மாணவர்கள் பூங்கொத்து, பரிசு பொருட்கள் கொடுத்து வரவேற்பு
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ள சூழ்நிலையில், பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பூங்கொத்து மற்றும் பரிசு பொருட்கள் கொடுத்து வரவேற்றனர்.
சென்னை: சுமார் ஒன்றை ஆண்டுகளுக்குப் பிறகு 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த செப்டம்பர் 1ஆம் தேதியில் இருந்து 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்தது. தற்போது படிப்படியாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், மீண்டும் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை (Corona Guidelines) பின்பற்றி பள்ளிகள் மாணவர்களுக்கு திறக்கப்பட்டது. அவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும்.
நேரடி வகுப்பில் பங்கேற்க பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் முககவசம் (Face mask) கட்டாயமாக அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல ஆசிரியர்கள் அனைவரும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி (Corona Vaccination) போட்ட சான்றிதழை பள்ளியில் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுமார் ஒன்றை ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிக்கு வரும் மாணவர்களை அந்தந்த பகுதியை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் விருந்தினர்களை வாசலுக்கு வந்து வரவேற்பதைப்போல மாணவர்களுக்கு வரவேற்பு கொடுங்கள் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (M K Stalin) வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது.
ALSO READ | பள்ளி மாணவர்கள் இலவசமாக பேருந்துகளில் பயணிக்கலாம்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு
அதேபோல், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ள சூழ்நிலையில், பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பூங்கொத்து மற்றும் பரிசு பொருட்கள் கொடுத்து வரவேற்றனர்.
கனமழை காரணமாக கள்ளக்குறிச்சி, வேலூர், நெல்லை, திருவாரூர், விழுப்புரம், கடலூர், மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை (Holiday for Schools) என அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர்.
இன்று முதல் நாள் என்பதால், குறைந்த அளவு மாணவர்களே பள்ளிக்கு வந்துள்ளனர். தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்த பிறகே பெரும்பாலான மாணவர்கள் பள்ளிகளுக்கு வருவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளிக்கு வருவதால், மாணவர்கள் மகிழ்ச்சியுடன் உற்சாகமாக வந்தனர்.
மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் திறப்பது பற்றி அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று ஏற்கனவே தெரிவித்துள்ளது.
இன்று முதல் (நவம்பர் 1) நேரடி வகுப்புகள் கலந்துக்கொள்ள பேருந்துகளில் பயணம் செய்து பள்ளிகளுக்கு வரும் மாணவி - மாணவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு உள்ள பழைய இலவச பஸ் பாஸ் அட்டையை பயன்படுத்தி பயணம் செய்யலாம். ஒருவேளை மாணவி - மாணவர்களிடம் பழைய பஸ் பாஸ் இல்லை என்றால், பள்ளி சீருடையில் பயணிக்கலாம் அல்லது பள்ளி அடையாள அட்டை ஆகியவற்றை காண்பித்து இலவசமாக பேருந்துகளில் பயணம் செய்து கொள்ளலாம் என போக்குவரத்துத் துறை (Department of Transportation) அறிவித்துள்ளது.
ALSO READ | கனமழை காரணமாக ஆறு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR