தஞ்சை, நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நாளை முதல் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தை புரட்டியெடுத்த கஜா புயல் பாதிப்பில் இருந்து தமிழகம் படிப்படியாக மீண்டு வருகின்றது. கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்படுள்ள நாகை, புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. புயலின்போது சாய்ந்து விழுந்த மரங்களை அகற்றுவது, புதிய மின்கம்பங்கள் நடுவது போன்ற பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


இப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்ததாலும், பள்ளிக்கூடங்களில் சாய்ந்து கிடக்கும் மரங்கள் அகற்றப்படாததாலும் கல்வி நிறுவனங்களுக்கு மாவட்ட நிர்வாகங்கள் விடுமுறை அறிவித்திருந்தன. இந்நிலையில் தற்போது அம்மாவட்டங்களில் ஓரளவுக்கு சீரமைப்பு பணிகள் நடைபெற்ற நிலையில், நாளை முதல் பள்ளிகள் செயல்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


மேலும், புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மாணவர்,மாணவிகளுக்கு நாள் மாலைக்குள் புதிய பாட புத்தகங்கள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவிதுள்ளார்.


பள்ளிகளுக்கு விரைவில் மின்சாரம் வழங்கப்படும் என குறிப்பிட்ட அவர், பள்ளிகளில் விழுந்த மரங்களில் 70% அகற்றப்பட்டுள்ளதாகவும், மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளில் 45 குழுக்கள் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.