புதுடெல்லி: சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) அவர்களை பெருமைபடுத்தும் விதமாக, அவருக்கு பாஜக (BJP) தலைமையிலான மத்திய அரசு, ‘Icon of Golden Jubliee’ என்ற பெயரில் வாழ்நாள் சாதனையாளர் விருது (Lifetime Achievement Award) அறிவித்துள்ளது. இதற்கு ஒருபக்கம் பாராட்டி குவிந்தாலும், மறுபக்கம் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. அவரை விட திரைத்துறையில் சாதித்தவர்கள் பலர் இருக்கும் போது, அவருக்கு இந்த விருது வழங்கியிருப்பது நியாயமானதா? என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்தவகையில், நாம் தமிழர் கட்சியின் (Naam Tamilar Katchi) ஒருங்கிணைப்பாளர் சீமான், ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியிருப்பதை பாராட்டுகிறேன். அதேவேளையில், அவரை விட அதிகம் சாதித்தவர்கள் திரை உலகில் இருக்கிறார்கள் எனக்கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் ரஜினிகாந்த் சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதை பெருமைப்படுத்தும் விதமாக ‘Icon of Golden Jubliee’ என்ற பெயரில் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என்றும், அந்த விருது கோவாவில் நவம்பர் 20 ஆம் தேதி துவங்கி நவம்பர் 28 வரை நடக்கும் 50-வது சர்வதேச திரைப்பட விழாவில் (International Film Festival of India) வழங்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை அடுத்து, "மதிப்புமிக்க கவுர விருதினை அறிவித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். 


இந்தநிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் (Seeman), திருவள்ளுவர் சிலை அவமதிப்பு, திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுதல் போன்ற விவகாரங்கள் குறித்து பேசிய அவர், நடிகர் ரஜினிகாந்த்துக்கு வழங்கப்பட்ட "வாழ்நாள் சாதனையாளர் விருது" குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுக்கப்படுவதை பாராட்டுகிறேன். அதேவேளையில், அவரை விட அதிகம் சாதித்தவர்கள் இளையராஜா, பாரதி ராஜா மற்றும் கமல்ஹாசன் போன்றோர்கள் திரை உலகில் இருக்கிறார்கள். ஆனால் ரஜினிக்கு வழங்கியிருப்பதை பார்த்தால், அவர் பாஜகவுக்கு நிக்கவும் நெருக்கமானவர் என்பதால், அவருக்கு மத்திய அரசு "வாழ்நாள் சாதனையாளர்" விருது வழங்கியுள்ளது என சீமான் அதிரடியாக கூறியுள்ளார்.