சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் மீண்டும் ஒன்று கூடுவதாக கூறி அப்பகுதியில் 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவை சென்னை போலீசார் விதித்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று நள்ளிரவு முதல் பிப்ரவரி 12-ம் தேதி வரை இத்தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


கடந்த 23-ம் தேதி மெரினாவில் இருந்து போராட்டக்காரர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள்.
அப்போது மெரினா கடற்கரை சாலை பகுதியிலும், அதை சுற்றியுள்ள இடங்களிலும், நகரின் பிற பகுதிகளிலும் பயங்கர கலவரம் ஏற்பட்டது. கல்வீச்சு, தீவைப்பு போன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதால், போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் வன்முறையில் ஈடுபட்டவர் களை விரட்டி அடித்தனர். அதன் பிறகு கலவரம் ஓய்ந்தது.


போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து, மெரினாவில் இன்று மீண்டும் இளைஞர்கள் ஒன்று கூட திட்டமிட்டு இருப்பதாகவும், இளைஞர்கள் கட்சி ஆரம்பிக்க தீர்மானித்து இருப்பதாகவும் தகவல் வெளியானது.


இந்த நிலையில் இளைஞர்கள் மீண்டும் மெரினாவில் ஒன்று கூட உள்ளதாக கூறி அங்கு போலீசார் குவிக்கப்பட்டு வந்தனர். தற்போது மெரினாவில் 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக சென்னை போலீசார் அறிவித்துள்ளனர். 


அதன்படி மெரினா மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இன்று முதல் அடுத்த மாதம் பிப்ரவரி 12-ம் தேதி வரை 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து நேற்று இரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்