Vijay, Seeman, H Raja | தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கையில் எங்களுக்கு உடன்பாடில்லை என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைபாளர் சீமான் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி வி சாலையில் தவெக மாநாடு நடத்திய நடிகர் விஜய், கட்சி கொள்கைகளை வெளியிட்டார். அதில் பெரியார், காமராஜர், அம்பேத்கர், அஞ்சலையம்மாள், வேலூநாச்சியார் ஆகியோரை கொள்கை வழிகாட்டிகளாக ஏற்பதாகவும், சாதி, மதம், இன பிரிவினைவாதம் பேசுபவர்கள் தவெக-வின் கொள்கை எதிரிகள் என அறிவித்தார். பெரியார், அண்ணா பெயரில் தமிழக மக்களை ஏமாற்றும் திராவிட மாடல் அரசு, தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் எதிரி என்றும் வெளிப்படையாக அறிவித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தமிழகத்தை கொள்ளையடிக்கும் திராவிட மாடல் ஆட்சி-விஜய் அட்டாக்!!


விஜய்யின் இந்த பேச்சு அரசியல் தளத்தில் பெரும் சலசலப்பை உருவாக்கியிருக்கும் நிலையில், தவெக கொள்கை குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா ஆகியோர் ஒரே மாதிரியான கருத்துகளை தெரிவித்துள்ளனர். தவெக கட்சி கொள்கை குறித்து சீமான் பேசும்போது, " விஜய் கட்சி பெரியாரை கொள்கை வழிகாட்டியாக ஏற்பதால், அதனை நாம் தமிழர் கட்சி ஏற்கவில்லை. எங்கள் கொள்கையும், விஜய் கட்சி கொள்கையும் நேர் எதிரானது. நாங்கள் மிகப்பெரிய இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோம். அவர் இப்போது தான் வந்திருக்கிறார். திராவிட கட்சிகளும் பெரியாரை முன்னிறுத்துகிறார்கள். அதனால் அவர்களுக்கும் விஜய் கட்சிக்கும் வேறுபாடு இல்லை. இது இன்னொரு திராவிட கட்சி. நாம் தமிழர் கட்சி 2026ல் தனித்து தான் போட்டியிடும். அதற்கான வேலைகளை இப்போதே தொடங்கிவிட்டேன்" என தெரிவித்துள்ளார். 


இதேபோல் ஹெச் ராஜா பேசும்போது, "விஜய்க்கு கொள்கை தெளிவு இல்லை. அவர் குழப்பத்தில் இருக்கிறார். பிரிவினைவாதம் பேசக்கூடிய திராவிட சித்தாந்தத்தை பின்பற்றுவதால் அவரால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. விஜய் கட்சியால் திராவிட கட்சிகளின் வாக்குகள் தான் சிதறும். திமுக வாக்குகள் கூட பிரியும். அதனால் விஜய் கட்சியால் திமுகவுக்கு தான் பாதிப்பு" என தெரிவித்துள்ளார். 


விஜய் விமர்சனம் குறித்து திமுகவின் ஆர்எஸ் பாரதி பேசும்போது, விமர்சனத்தை ஏற்கிறோம். ஆனால், அதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என கூறியுள்ளார். காய்த்த மரத்தில் தான் கல்லடிபடும், 75 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் திமுக இதைப் போல் எத்தனையோ சலசலப்புகளை எல்லாம் பார்த்துவிட்ட கட்சி என்றும் கூறியுள்ளார்.


மேலும் படிக்க | தவெக மாநாடு | 7 மணி கெடு.. காவல்துறை முக்கிய மெசேஜ், பரபரக்க மேடைக்கு வந்த விஜய்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ