திராவிடர்கள் இல்லை; உண்மையான சமூக நீதி காவலர் நிதிஷ்குமார்தான் - சீமான் புகழாரம்
குடிவாரி கணக்கெடுப்பின் மூலம் இந்திய ஒன்றியத்தின் உண்மையான சமூக நீதி காவலர் நிதிஷ்குமார் என சீமான் புகழாரம் சூட்டியிருக்கிறார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ குடிவாரி கணக்கெடுப்பை நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியதோடு, அமைச்சரவையில் ஒப்புதல் அளித்து அதற்காக நிதியும் ஒதுக்கியதன் மூலம் உண்மையான சமூகநீதியை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுத்துள்ள பீகார் மாநில முதலமைச்சர் ஐயா நிதிஷ்குமார் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி தமது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.
அறுபது ஆண்டுகாலமாகச் சமூகநீதி மண், பெரியார் மண், சுயமரியாதை, பகுத்தறிவு என்றெல்லாம் பேசி, சமூகநீதிக் காவலர்கள் என்று தங்களுக்குத் தாங்களே தம்பட்டம் அடித்துக்கொண்டு தமிழ்நாட்டை மாறிமாறி ஆண்ட திராவிடக் கட்சிகள்,
உண்மையான இடப்பங்கீட்டை நடைமுறைப்படுத்தி அனைத்து மக்களுக்கும் சமமான நீதியை வழங்குவதற்கான குடிவாரிக் கணக்கெடுப்பை நடத்த மறுத்து ஏமாற்றி வருகின்றன.
அவ்வாறெல்லாம் வெற்றுக்கூச்சலும், வெளிவேடமும் இடாத பீகார் மண் குடிவாரி கணக்கெடுப்பை நடத்த உத்தரவிட்டு இந்திய ஒன்றியத்தில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்மாதிரியாகத் திகழ்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. உண்மையான சமூகநீதிக்காவலர் பீகார் முதல்வர் ஐயா நிதிஷ்குமார் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க |பாஜகவை சுற்றி வட்டமடித்த பாலியல் புகார்கள்; மடைமாற்ற சர்ச்சை கருத்தை பேசினாரா ஆளுநர்?
மேலும் படிக்க | 'தமிழ்நாடு' பெயரில் இவர்களுக்கு என்ன பிரச்னை...? - ஆளுநர் மீது அமைச்சர் அட்டாக்!
மேலும் படிக்க | உச்ச நீதிமன்ற வாயிலில் அம்பேத்கர் சிலை நிறுவப்பட வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ