எருமை மாடும்தான் கருப்பு அதுக்காக அது திராவிடரா? சீமான் கேள்வி
எருமை மாடுக்கூடத்தான் கருப்பாக இருக்கிறது அதற்காக அது திராவிடரா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இளையராஜா எழுதிய முன்னுரைதான் தற்போது ஹாட் டாபிக்.தனது கருத்தை இளையராஜா பின்வாங்க வேண்டுமென ஒரு தரப்பினர் தீவிரமாக பேச கருத்திலிருந்து பின்வாங்கப்போவதில்லை என்பதை இளையராஜா தெளிவாக உணர்த்திவிட்டார். அதேசமயம், இளையராஜாவுக்கு தமிழக பாஜக தலைவரிலிருந்து, பாஜக தேசிய தலைவர்வரை ஆதரவு கொடுத்துக்கொண்டிருக்கின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில் இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “கருப்பு திராவிடன் பெருமைமிகு தமிழன்” என பதிவிட்டிருந்தார். இதனையடுத்து இந்த விவகாரம் அடுத்தக்கட்டத்துக்கு சென்றது.
யுவன் ஷங்கர் ராஜாவின் இன்ஸ்டா பதிவு குறித்து அண்ணாமலையிடம் கேட்டபோது, நானும் கருப்பு திராவிடன்தான். யுவன் சாதாரண கருப்பு. நான் அண்டங்காக்கை கருப்பு என கூறியிருந்தார். அவரது இந்தக் கருத்தை பலரும் பலவாறு விமர்சித்தனர். குறிப்பாக சமூகவலைதளவாசிகள் அண்ணாமலையை கலாய்க்கவும் செய்தனர்.
மேலும் படிக்க | தாமரை மேலே நீர்த்துளி போல்... இளையராஜா மீது ஏன் வரம்பு மீறிய தாக்குதல்?
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த விவகாரம் குறித்து பேசுகையில், கருப்பாக இருந்தால் திராவிடர் என்றால் எருமை மாடுகூட கருப்பாக இருக்கிறது , எருமை திராவிடரா” என கூறியிருக்கிறார்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR