சர்ச்சைக்குரிய பேச்சு.... பாய்ந்தது வழக்கு... கைது செய்யப்படுவாரா சீமான்..?
முன்னால் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குறித்து சர்ச்சையாக பேசியதாள் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை: முன்னால் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குறித்து சர்ச்சையாக பேசியதாள் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் நாங்குநேரி (Nanguneri), விக்கிரவாண்டி (Vikravandi) தொகுதிகளுக்கு இந்த மாதம் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் (By-Elections) நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த இரண்டு தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேட்பாளர்கள் களம் காண்கிறார்கள்.
நாங்குநேரி தொகுதியில் அதிமுக சார்பாக வெ.நாராயணனும், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் சார்பாக ரூபி மனோகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பாக இந்த தொகுதியில் சா.ராஜநாராயணன் வேட்பாளராக களம் காண்கிறார். விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பாக எம்.ஆர். முத்தமிழ் செல்வனும், திமுக சார்பில் விக்கிரவாண்டியில் புகழேந்தியும், நாம் தமிழர் கட்சி சார்பாக கு.கந்தசாமி போட்டியிடுகிறார்கள்.
இந்தநிலையில், விக்ரவாண்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரான கு.கந்தசாமியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார் சீமான். அப்பொழுது கூட்டத்தில் பேசிய அவர், ஒரு கட்டத்தில் முன்னால் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையை குறிப்பிட்டுப் பேசினார். ராஜீவ்காந்தியை தாங்கள் தான் கொன்றோம் என்பது சரிதான் என்றும், அமைதிப் படையை அனுப்பி தமிழர்களை கொன்று குவித்த ராஜீவ்காந்தி தமிழர்களின் தாய் நிலத்தில் கொன்று புதைக்கப்பட்டார் என வரலாறு ஒருநாள் திருத்தி எழுதப்படும் என்றும் சீமான் ஆவேசமாக பேசினார். இவரின் இந்த பேச்சு மிகவும் சர்ச்சைக்குள்ளானது.
இதனையடுத்து காங்கிரஸ் சார்பில், "சீமானின் பேச்சு வன்முறையை தூண்டும் வகையிலும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையிலும் உள்ளது. மேலும் தலைவர்களை குறித்து பேசும் போது அவதூறாக பேசக்கூடாது எனக்கூறி, சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.