அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? அவரு தாங்க முடிவு பண்ணணும் - செல்லு ராஜூ
அதிமுகவில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் இணைத்துக் கொள்ளப்படுவாரா? என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி தான் முடிவு செய்வார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளித்துள்ளார்.
திமுக ஒரு ரவுடி கட்சி
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு, "சட்டமன்றத்தில் ஆளும் கட்சிக்கு தூதி பாடுபவர்களுக்கு மட்டுமே மரியாதை தரப்படுகிறது. மக்கள் பிரச்சினைகளை சட்டமன்றத்தில் பேச முடியவில்லை. முதல்வர் பேசும்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கண்ணியம் காத்து வருகிறோம். எதிர்க்கட்சி தலைவர் பேசினால் ஆளும் கட்சி உறுப்பினர்கள் கண்ணியம் காப்பதில்லை. சட்டமன்றம் ஜனநாயகம் முறையில் நடைபெறவில்லை. 4 துறை சார்ந்த மானிய கோரிக்கைகள் 15 நிமிடங்கள் மட்டுமே நடக்கிறது. திமுக என்பது ரவுடி கட்சி.
மேலும் படிக்க | 12 மணி நேர வேலை தீர்மானம்: எதிர்க்கட்சியாக இருந்த போது எதிர்த்தது ஏன்?
அதிமுகவில் ஓபிஎஸ்
திமுகவில் ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது. சபாநாயகர் சட்டமன்றத்தில் வாத்தியார் போல நடந்து கொள்கிறார். சட்டப்பேரவைத் தலைவர் போல நடந்து கொள்வதில்லை. அதிமுகவில் ஒ.பி.எஸ் இணைத்து கொள்வது குறித்து எடப்பாடி பழனிச்சாமி தான் முடிவு செய்ய வேண்டும். அதிமுகவில் முடிவு எடுப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மானம் மாறி அதிமுகவுக்கு திரும்பி வர வேண்டும். அதிமுகவை எதிர்ப்பது திமுகவுக்கே சாதகமாக அமையும்.
திமுகவுக்கு தக்க பாடம்
எடப்பாடி பழனிச்சாமி திமுகவுடன் மென்மையான போக்கை கடைபிடிக்கவில்லை, எம்.ஜி.ஆர் போல எடப்பாடி பழனிச்சாமி முழுமையாக திமுகவை முழுமையாக எதிர்த்தார். சித்திரை திருவிழாவை ஒளிப்பதிவு செய்ய 1 மணி நேரத்திற்கு 40,000 கட்டணம் நிர்ணயம் செய்து இருப்பது கண்டனத்துக்குரியது 12 மணி நேர வேலை சட்ட மசோதாவுக்காக நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர்கள் திமுகவுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். அதிமுக ஆட்சி காலத்தில் மசோதவை நிறைவேற்ற மத்திய அரசு கூறியது. ஆனால், எடப்பாடி பழனிச்சாமி மசோதாவை நிறைவேற்றவில்லை" என கூறினார்.
மேலும் படிக்க | அதிமுகவில் எங்களுக்கு இல்லாத உரிமை எவருக்கும் கிடையாது: ஓபிஎஸ் ஆதரவாளர் ஆவேசம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ