கமலஹாசன் நல்ல கலைஞர், ஆனால் அவருக்கு அரசியல் ஒத்துவராது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாட்டில் வரும் மே 19-ஆம் தேதி நடைபெறவுள்ள 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று அங்கு பிரசாரம் செய்தார்.
 
பிரச்சாரத்தின் போது., "முஸ்லிம்கள் நிறைய இருக்கும் பகுதி என்பதால் இதனை சொல்லவில்லை. காந்தி சிலைக்கு முன்னாள் சொன்னேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாத்ராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுபேரன். அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருக்கிறேன்" என தெரிவித்தார்.


இதைத்தொடர்ந்து கமலின் இந்த கருத்திற்கு பாஜக தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், இந்தி நடிகர் விவேக் ஓபராய் தனது ட்விட்டர் பக்கத்தில் "எப்படி கலைக்கு மதம் கிடையாதோ அதேபோல் தீவிரவாதத்திற்கும் மதம் கிடையாது" என தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.


இவரைத்தொடர்ந்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடன் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள், சிறுபான்மையினர் வாக்குகளை பெற விஷத்தை கக்கி வரும் கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் "யாரை திருப்தி படுத்த கமல் இவ்வாறு பேசி வருகின்றார்., யாரோ ஒருவர் பயங்கரவாதம் செய்தால் அதற்காக ஒட்டுமொத்த சமுதாயத்தையும் குறைகூறுவதாக என கேள்வி எழுப்பினார். 


இந்நிலையில் மதுரை திருப்பரங்குன்றத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து வாக்கு சேகரித்த செல்லூர் ராஜூ அவர்கள், பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்., "கமல் ஒரு நல்ல கலைஞர், ஆனால் அவருக்கு அரசியல் ஒத்துவராது. மக்கள் நீதி மய்யம் என்னும் பெயரே சரியில்லை, பேசாமல் அவர் கட்சியை கலைத்துவிடலாம். தோல்வி பயத்தில் நடமாடும் அவர் திமுக பணப்பட்டுவாடா செய்து வருகிறது எனவும், இரட்டை இலையில் இருந்து உதிர்ந்த இலை டிடிவி தினகரன் எனவும் உளரி வருகின்றார்" என விமர்சித்துள்ளார்.