தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக செல்வபெருந்தகை பொறுப்பேற்றபின் முதன் முறையாக குமரி மாவட்டத்திற்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக சென்றார். மார்த்தாண்டம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவருக்கு கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து தொண்டர்கள் ஆளுயர மாலை மற்றும் வீர வாள் வழங்கி சிறப்பித்தனர். இதனைத் தொடர்ந்து, தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், காங்கிரஸ் பேரியக்கத்தின் ஆத்மாவாகவும் இதயமாகவும் குமரி மாவட்டம் விளங்கி வருவதாக கூறினார். பெருந்தலைவர் காமராஜர் சிறு இளைஞர் ஒருவரால் விருதுநகரில் தோற்கடிக்கப்பட்டபோது அவர் பிறந்த மண் அவரை கைவிட்டாலும் பரவாயில்லை நாங்கள் இருக்கிறோம் என்று பெருந்தலைவர் காமராஜரை வெற்றி பெற செய்த மண் குமரி மண் என்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Lok Sabha Election: தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல்!


அதுமட்டுமல்லாமல் அதிகம் படித்தவர்கள், கல்வியாளர்கள் அதிகம் இருக்கும் மாவட்டமாக குமரி மாவட்டம் என்று கூறிய செல்வப்பெருந்தகை, பிரதமர் மோடி மற்றும் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார். தாமரை மலர்கிறது மலர்கிறது என்று சொல்கிறார்கள், எங்கே மலர்கிறது படர்தாமரை மலர்ந்தால் உடலுக்கு வியாதி வரும் என அவர் விமர்சித்தார். மேலும், ஆகாயத்தாமரை மலர்ந்தால் குளங்கள் ஏரிகள் நாசமாகும், பாஜகவின் தாமரை மலர்ந்தால் இந்த தேசம் சுடுகாடாக மாறும். அதைத்தான் கடந்த ஒன்பதே முக்கால் ஆண்டுகளாக பார்த்து வருகிறோம் என செல்வப்பெருந்தகை கூறினார். என்னென்ன வாக்குறுதிகளை எல்லாம் கொடுத்தார் பிரதமர் மோடி, ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை கொடுப்பேன் என்று சொன்னவர் இரண்டுகோடி பேருக்கு இருந்த வேலை வாய்ப்பையும் இல்லாமல் செய்துவிட்டார் என செல்வப்பெருந்தகை கூறினார். 


பண மதப்பிழப்பீட்டின் மூலமாக பெட்ரோல் டீசல் விலை குறைப்பு செய்யப்படும் என்றார், இரண்டு மடங்கு இப்போது விலையை ஏற்றி விட்டார்.  இந்தியாவின் பணமதிப்பு அமேரிக்கா டாலருக்கு நிகராக உயர்த்தப்படும் என்றார், ஆனால் இன்றைக்கு இந்தியாவின் பணத்தின் மதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது. அவர் சொன்னது எதையும் செய்யவில்லை இந்த நாட்டின் சிறு குறு தொழில்கள் அனைத்தையும் அழித்து விட்டார். இதுதான் மோடியின் ஆட்சி என செல்வப்பெருந்தகை கூறினார். அண்ட புழுகன் ஆகச புழுகன் என்ற பெயர் பிரதமர் மோடிக்கு தான் பொருந்தும் என தெரிவித்த அவர், வரும் தேர்தலில் குமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும் அதற்கான பணி உங்களிடம் இருந்து துவங்க வேண்டும் என்று கூறினார்.


மேலும் படிக்க | பிரதமர் மோடி தைரியம் இருந்தால் எங்கள் மீது ரெய்டு விடட்டும் - திமுக அமைச்சர் சவால்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ