செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் மற்றும் மறைமலை நகர் பகுதியில் செயல்பட்டுவரும் ஃபோர்டு தொழிற்சாலை இந்த மாதம் இறுதிக்குள் மூடப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இந்த நிலையில், குஜராத் தொழிற்சாலையை எப்படி டாடா நிறுவனம் வாங்கி அனைத்து ஊழியர்களுக்கும் வேலைவாய்ப்பை உறுதி செய்ய குஜராத் அரசு நடவடிக்கை எடுத்தது அதேபோல தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தை விட்டு கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஃபோர்டு இந்தியா வெளியேறுகிறது என அறிவித்ததில் இருந்து தொழிற்சாலை ஊழியர்கள் தொடர்ந்து தங்களுடைய வேலைவாய்ப்பை தமிழக அரசு மற்றும் நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.



இந்நிலையில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட மாட்டோம் என்று கூறினால் மட்டுமே தொழிற்சாலையில் இனிப் பேச்சுவார்த்தை நடைபெறும் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டதை எதிர்த்து கடந்த எட்டு நாளாக போராட்டம் நீடித்து வருகிறது. இப்போராட்டத்தில் 2500க்கும் மேற்பட்ட நிரந்தரப் பணியாளர்கள் மற்றும் பெண்கள் உட்பட ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இதுவரை எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.



மேலும் படிக்க | முன்னாள் காதலனுடன் பழகிய பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசிய பெண்!


தமிழக அரசு சார்பில், பெரிய அளவில் யாரும் போராட்டத்தில் ஈடுபட்டும் தொழிற்சாலைகள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் பேச்சுவார்த்தையில் ஈடுபட வில்லை என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்தநிலையில் ஊழியர்களின் போராட்டம் இன்று 8வது நாளாக மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உடனடியாக தமிழக அரசு இதில் தலையிட்டு ஊழியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்பதே கோரிக்கையாக இருந்து வருகிறது.


மேலும் படிக்க | மீன்பிடித் திருவிழாவில் சேற்றில் சிக்கி கல்லூரி மாணவர் பலியான சோகம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR