Senthil Balaji IT Raid: தமிழ்நாடு மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரிச்சோதனை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாதுகாப்பு கேட்கவே இல்லை 


இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது,"பாதுகாப்பைக் கேட்காமலேயே தமிழ்நாடு காவல்துறையினர் எவ்வாறு பாதுகாப்பை வழங்குவார்கள்" என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். அதாவது, வருமான வரித்துறை சோதனையின் போது மாநில காவல்துறையை அழைப்பதுதான் வழக்கம், ஆனால், அவர்கள் மாநில காவல்துறையை அழைத்துச்செல்லவில்லை என குற்றச்சாட்டு வைக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. 


மேலும்,"வருமான வரிச்சோதனை முடிவடைந்த பிறகு, முழு விவரங்களுடன் விளக்கம் அளிக்கிறேன். சட்டப்பேரவை தேர்தலின்போதே வருமான வரிச் சோதனயை எதிர்கொண்டோம். வருமான வரிச்சோதனை ஒன்றும் எங்களுக்குப் புதிதல்ல. வருமான வரிச்சோதனை நடத்தி வரும் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும். 


மேலும் படிக்க | செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் ஐ.டி ரெய்டு!


அமைச்சரின் கேள்விகள்?


எனது சென்னை மற்றும் கரூர் வீடுகளில் சோதனை நடைபெறவில்லை. எனது சகோதர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் இல்லங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனைக்கு வரும் போது சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் இது குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி விளக்கம் அளித்துள்ளார்.


சோதனை நடைபெறும் இடங்களில் ஆதரவாளர்கள் யாரும் இருக்கக் கூடாது. அதிகாரிகளுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று நான் அறிவுறுத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். 2006ஆம் ஆண்டு முதல், இன்று வரை ஒரு சதுர அடி நிலத்தைக் கூட நானோ எனது குடும்பத்தினரோ பதிவு செய்யவில்லை. நண்பர் வீட்டில், கேட்டை திறப்பதற்கு முன்பே, வருமான வரித்துறை அதிகாரிகள் சுவர் ஏறிக் குதித்துச் சென்றுள்ளனர். அது ஏன்?" என்றும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.


வாகனங்கள் மீது தாக்குதல்


முன்னதாக, வருமான வரித்துறை அதிகாரியின் அதிகாரிகளின் வாகனங்களை சிலர் அடித்து உடைத்துள்ளனர். இதையே அமைச்சர் செந்தில்பாலாஜி விரும்பத்தகாத செயல் என குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து ஆர்.எஸ் பாரதி அளித்த விளக்கத்தில்,"ரெய்டுக்கு வந்தவர்களின் வாகனங்களை உடைத்தது தவறு தான். நான் சரியென்று சொல்லவில்லை. யார் என்னவென்று தெரியாமல் அச்சத்தில் செய்திருக்கிறார்கள். திமுகவினர் இந்த செயலை செய்திருந்தாலும் கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என விளக்கமளித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் இல்லாத நேரத்தில் ரெய்டு நடத்தப்படுகிறது எனவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். 


"போர்க்களத்தில் குதிரைப்படை,  காலட்படை ஆகியவற்றை எப்படி வைத்திருப்பார்களோ அதைப் போல ஒன்றிய பாஜக அரசு சிபிஐ, வருமான வரித்துறை போன்ற துறைகளை வைத்திருக்கிறார்கள். கர்நாடக தேர்தலில் ரோட் ஷோ நடத்தி என்னென்னமோ நாடகம் ஆடியும், பணத்தை குவித்தும் பார்த்தார்கள். தோல்வி அடைந்தார்கள். பாஜகவினர் தான் கர்நாடக தேர்தலில் ரூ. 2000 நோட்களை அதிகம் பயன்படுத்தினார்கள். 2024 தேர்தலில்  ஆட்டநாயகனாக (Man of The match) மு.க. ஸ்டாலின் தான் இருப்பார்" எனவும் ஆர்.எஸ் பாரதி தெரிவித்திருந்தார். 


மேலும் படிக்க | முதல்வர் இல்லாத நேரத்தில் வேண்டுமென்றே நடத்தப்படும் ரெய்டு இது-ஆர்.எஸ் பாரதி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ