Senthil Balaji latest news : உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து சிறையில் இருந்து வெளியே வந்தார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு உச்சநீதிமன்றம் இன்று சில நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கியது. திங்கள், வெள்ளிக்கிழமைகளில் சென்னையில் இருக்கும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும், அரசு தரப்பு சாட்சியங்களை கலைக்க முயற்சிக்கக்கூடாது, பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை உச்சநீதிமன்றம் விதித்துள்ளது. அத்துடன் வழக்கு எதிராக செயல்பட்டால் உடனடியாக செந்தில் பாலாஜியின் ஜாமீன் ரத்து செய்யப்படும் என்றும் ஜாமீன்கோரி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பில் தெரிவித்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனைத் தொடர்ந்து அந்த தீர்ப்பின் விவரங்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, செந்தில் பாலாஜியின் உறவினர்கள் இரண்டு பேர் உச்சநீதிமன்றம் கூறியபடி 25 லட்சம் ரூபாய்க்கான ஜாமின் உத்தரவாதத்தை தாக்கல் செய்தனர். அப்போது, திடீரென நீதிபதி கார்த்திகேயன், செந்தில் பாலாஜிக்கு வழங்கிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக படிக்கவில்லை என தெரிவித்தார். மேலும், ஜாமீன் உத்தரவாதத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு தாக்கல் செய்யுங்கள் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். அத்துடன், ஜாமீன் உத்தரவாதம் வழங்கியதில் குளறுபடிகள் இருப்பதை சுட்டிக்காட்டியதுடன், செந்தில் பாலாஜியை பிணையில் விடுவிப்பதில் அமலாக்கத்துறையின் பதில் வேண்டும் என்றும் கேட்டார். இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 


மேலும் படிக்க | செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு : அமலாக்கத்துறை சறுக்கியது எங்கே?


இதனால் செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வருவது சிக்கல் ஏற்பட்டது. அமலாக்கத்துறை வழக்கறிஞரையும் ஆஜராகுமாறு நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை வழக்கறிஞர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகி, செந்தில் பாலாஜியை பிணையில் விடுப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என தெரிவித்தார். இதனையடுத்து, செந்தில் பாலாஜி உறவினர்கள் வழங்கிய ஜாமீன் உத்தரவாதங்களை ஆய்வு செய்த நீதிபதி கார்த்திகேயன், குளறுபடிகள் சரிசெய்யப்பட்டதை ஏற்றுக் கொண்டு, பிணையில் விடுவிக்கும் உத்தரவாதங்களை ஏற்றுக் கொண்டார். 


இதனைத் தொடர்ந்து உடனடியாக செந்தில் பாலாஜியை பிணையில் விடுவிக்கும் 25 பக்க உத்தரவு நகல்கள் இமெயில் மூலம் சிறைத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு வழக்கமான நடைமுறைகள் முடிந்த பின்னர் செந்தில் பாலாஜி சென்னை புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். புழல் சிறைக்கு வெளியே திமுக தொண்டர்கள் ஏராளமனோர் குவிந்து செந்தில் பாலாஜியை ஆரவாரமாக வரவேற்றனர். தொண்டர்களின் வரவேற்புக்கு மத்தியில் செந்தில் பாலாஜி சென்ன புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார். 


மேலும் படிக்க | Chennai Rain | எங்கெல்லாம் பெய்யும்! சென்னையை புரட்டி போட்ட மழை! மக்கள் கடும் அவதி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ