பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி எண்ணூர் தனசேகரன் என்பவர் மத்திய சிறையில் இருந்து வருகிறார். இவர் மத்திய சிறையில் இருந்து செல்போன் மூலம் வெளியில் தொடர்பு கொண்டு வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் உதவி ஜெயிலர் மணிகண்டன் தலைமையிலான சிறை காவலர்கள் கைதி தனசேகர் அறையில் சோதனை செய்துனர். அப்போது செல்போன் பறிமுதல் செய்து, கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது. இந்தச் சூழலில் தனது செல்ஃபோனை பறிமுதல் செய்த உதவி ஜெயிலரை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என தனசேகர் கூறிவந்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையே, இவ்வழக்கில் துணை காவல் கண்காணிப்பாளர் கரிகால் பாரிசங்கர், உதவி ஆய்வாளர் மணிகண்டன், சைபர் குற்றப்பிரிவு தலைமை காவலர் பாலமுருகன் ஆகியோர் கடலூர் மத்திய சிறையில் பணியாற்றும் சந்தேக நபர்களின் செல்போன் நபர்களை ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மத்திய சிறையில் இருந்து ஒரு குறிப்பிட்ட எண்ணில் இருந்து சென்னை, திருச்சி போன்ற ஊர்களில் உள்ள குறிப்பிட்ட எண்ணுக்கு அடிக்கடி செல்போன் தொடர்பு இருந்தது விசாரணையில் தெரியவந்தது. அந்த செல்போன் எண் பயன்படுத்தும் நபர் கடலூர் மத்திய சிறையில் பணியாற்றும் முதல் நிலை சிறைக்காவலர் செந்தில்குமார் என்பது தெரிந்தது. 


இதனையடுத்து சந்தேகத்தின்பேரில் செந்தில்குமாரிடம் விசாரணை மேற்கொண்டதில் செந்தில் தானாக முன்வந்து தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டதின்பேரில் ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. 


மேலும் படிக்க | எடப்பாடி பழனிச்சாமி புத்தி தடுமாற்றத்தில் உள்ளார் - புகழேந்தி தாக்கு


அவர் கொடுத்த வாக்குமூலத்தில், “தான் பிரபல ரவுடி எண்ணூர் தனசேகருக்கு செய்யும் சட்ட விரோத உதவிகளைஉதவி ஜெயிலர் உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பி தனக்கு பனிஷ்மென்ட் மெமோ கொடுத்ததால் அவரை பழிவாங்கும் நோக்கத்தில் இருந்தேன். இதனையடுத்து ரபல ரவுடி எண்ணூர் தனசேகரருடன் இணைந்து உதவி ஜெயிலர் மணிகண்டன் குடும்பத்தை தீர்த்து கட்டவேண்டும் என்ற நோக்கில் எண்ணூர் தனசேகர் கூறியபடி சென்னை தினேஷ் என்பவரிடமும், திருச்சி நபர்களிடமும் தொடர்புகொண்டேன். 


இதனையடுத்து அவர்களை அழைத்துச் சென்று உதவி ஜெயிலர் மணிகண்டன் வீட்டை அடையாளம் காண்பித்தேன். திட்டம் தீட்டியபடி சம்பவ தினத்தன்று உதவி ஜெயிலர் வீட்டில் பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்பட்டது” என கூறினார்.


மேலும் படிக்க | ஆளுநர் ரவிக்கு மூத்த வழக்கறிஞர் துரைசாமி அனுப்பிய மனுவால் பரபரப்பு!


தொடர்ந்து இதுதொடர்பாக விசாரித்ததில் 8 பேருக்கு தொடர்பு இருப்பது உறுதியானது. மேலும், இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிகளான முதல் நிலை சிறைக்காவலர் செந்தில்குமார் மற்றும் சென்னையை சேர்ந்த தினேஷ்  ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட இதர குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEata