தமிழக அரசியலில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் மோதல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார். ஆனால் சில அதிமுக அமைச்சர்கள் சசிகலா முதல்வர் ஆகா வேண்டும் என கூறி வருகின்றனர். பன்னீர்செல்வமும் சசிகலா முதல்வராக வழி விடவேண்டும் என பகிரங்கமாக கூறி வருகின்றனர். இச்சம்பவம் தமிழக அரசியளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


தற்போதிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அமைச்சரவையில் இருக்கும் சில அமைச்சர்களே சசிகலா தான் முதல்வராக வேண்டும் என கூறி இருப்பது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. 


முன்னால் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற போது கூட அப்போதிய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை தான் முதல்வரகினார். கடந்த 5-ம் தேதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். மரணமடைந்த அன்றே ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகவும் மற்றும் அவர் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றனர். 


தற்போது அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் யார் என்ற குழப்பமே தீராத நிலையில், சசிகலா முதல்வராக வேண்டும் என்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.