தமிழகத்தின் தலைமைச் செயலாளராக உள்ள வெ.இறையன்பு ஐஏஎஸ் ஓய்வுபெறவுள்ள நிலையில், அவர் பதவியல் அடுத்த தலைமைச் செயலாளராக சிவதாஸ் மீனா அமர்த்தப்பட்டுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இறையன்பு ஐ.ஏ.எஸ் ஓய்வு:


தமிழகத்தின் தலைமைச் செயலாளராக உள்ள் இறையன்பு ஐ.ஏ.எஸ் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து இவரது பதவிக்கு வரவிருக்கும் அதிகாரியின் பெயர் வெளியிடப்படாமல் இருந்தது. ஆனால், இந்த பதவியில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் ஒருவர்தான் பணியமர்த்தப்பட உள்ளார் என தகவல்கள் வெளியானது. குறிப்பாக தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகட்தின் தலைவராக உள்ள ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகத்துறை செயலராக உள்ள சிவ்தாச் மீனா, வருவாய் நிர்வாக ஆணையராக பணியாற்றும் எஸ்.கே பிரபாகர் ஆகிய மூவரின் பெயர்கள் இறுதிப்பட்டியலில் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் இதிலிருந்து சிவ்தாஸ் மீனா தலைமை செயலாளர் பதவிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 


மேலும் படிக்க | மதுரையில் பரபரப்பு: ஆளுநரை மாற்றக்கோரி திமுக நிர்வாகி தீக்குளிக்க முயற்சி!


யார் இந்த சிவ்தாஸ் மீனா..?


சிவ்தாஸ் மீனா 1989ஆம் ஆண்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்தவர். இவர், ராஜஸ்தானில் பிறந்து ஜெய்பூரில் சிவில் என்ஜினியரிங் படித்தவர். ஜப்பானில் சர்வதெச ஆய்வுகளில் முதுகலை பட்டம் பெற்றார். இவருக்கு கிட்டத்தட்ட 30 ஆண்டு கால ஐஏஎஸ் பணி அனுபவம் உள்லது. இவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4 முக்கிய செயலாளர்களுள் ஒருவராக இருந்தார். 


ஜெயலலிதாவிடம் பணியாற்றியவர்..


ஜெயலலிதாவின் இறப்பிற்கு பிறகு பல்வேறு அரசியல் திருப்பங்கள் நிகழ்ந்தன. அதிமுகவின் தற்போதைய பொது செயலாளர் பதவியில் உள்ள எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது சிவ்தாஸ் மீனாவிற்கு சரியான பதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால், இவர் மத்திய அரசுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். எடப்பாடி ஆட்சிகாலத்தில் சிவ்தாஸ் மீனா டெல்லி சென்று மத்திய அரசு பணியில் சேர்ந்தார். டெல்லியில் மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்தில் இவர் பணியமர்த்தப்பட்டார். அதன் பிறகு திமுக ஆட்சிக்காலத்தில்தான் தமிழகத்தில் இவருக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டன. 


புதிய தலைமை செயலாளர்..


சிவ்தாஸ் மீனா வேறு மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும் தன்னை எங்கு பணியமர்த்தினாலும் எந்த பணி கொடுத்தாலும் அதை திரம்பட செய்யக்கூடியவர் என கூறப்படுகிறது. மேலும், தலைமை செயலாளர்களுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்களில் இவர்தான் சீனியர் என்றும் கூறப்படுகிறது. இவை மட்டுமன்றி, இவர் இக்கட்டான சூழ்நிலையையும் திறமையாக கையாண்டு திறம்பட செயல்படக்கூடியவர் என சில முக்கிய அதிகாரிகளால் கருத்து கூறப்படுகிறது. இதனால்தான் இவர் இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ