மாணவர்கள் மீது மிருகத்தனமான தாக்குதல்... ஸ்டாலின் வேதனை!
குடியுரிமை (திருத்த) சட்டத்தினை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை (திருத்த) சட்டத்தினை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது டெல்லி மற்றும் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறைகள் குறித்து திமுக தலைவர் MK ஸ்டாலின் கவலை தெரிவித்ததோடு, இந்த சட்டத்தினை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, டெல்லியின் ஜாமியா நகர் அருகே ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 15) குடியுரிமை எதிர்ப்பு போராட்டக்காரர்களால் மூன்று பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. தீயைக் கட்டுப்படுத்த சம்பவ இடத்திற்கு விரைந்த நான்கு தீயணைப்பு டெண்டர்களும் எதிர்ப்பாளர்களால் தாக்கப்பட்டன. இந்த தாக்குதலில் இரண்டு தீயணைப்பு படையினர் காயமடைந்துள்ளதாக டெல்லி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான செய்திகளை படிக்க...
வன்முறை நடந்த உடனேயே, ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் தலைமை வக்கீல் வசீம் அகமது கான் கூறுகையில், டெல்லி காவல்துறை எந்தவொரு அனுமதியுமின்றி வலுக்கட்டாயமாக வளாகத்திற்குள் நுழைந்து, ஊழியர்கள் மற்றும் வளாகத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருந்த மாணவர்களை அடித்து உதைத்தது. இதன் காரணமாகவே போராட்டங்கள் அடுத்த கட்டத்திற்கு சென்றது என தெரிவித்துள்ளார்.
இதனிடையே உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் திருத்தப்பட்ட சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தின் ஈடுப்பட்டனர். கூடியிருந்த மாணவர்களை கலைக்க தடியடி மற்றும் கண்ணீர் புகைகுண்டு பயன்படுத்தப்பட்டது.
"பரவலான, தொடர்ச்சியான போராட்டங்களை அடுத்து, பாஜக அரசு CAA2019 (குடியுரிமை திருத்தச் சட்டம்)-ஐ மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று திரு ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான செய்திகளை படிக்க...
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், "ஜாமியா மிலியா மற்றும் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது மிருகத்தனமான தாக்குதல்களின் காட்சிகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்
மாணவர்களின் ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் பதில் அளிக்கப்பட வேண்டும். பரவலான போராட்டங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் பாஜக அரசு குடியுரிமை (திருத்த) சட்டத்தினை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான செய்திகளை படிக்க...
பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் துன்புறுத்தப்பட்ட மத சிறுபான்மையினருக்கு புலம் பெயர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க முற்படும் குடியுரிமை திருத்தச் சட்டம், தற்போது நாடெங்கிலும் பல்வேறு போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.