ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை... கோவையில் அதிர்ச்சி!
Coimbatore News Update: கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, தாய், குழந்தை என நால்வரும் தற்கொலை செய்து கொண்டது சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Coimbatore News Update: கோவை வடவள்ளி வேம்பு அவன்யூ குறிஞ்சிநகரை சேர்ந்தவர் ராஜேஷ் (34). இவர் தனியார் நிறுவனத்தில் டிசைனர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். தாயார் பிரேமா (73), மனைவி சுருதி (29), மகள் யக்ஷிதா (10) ஆகியோருடன் ராஜேஷ் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
தகவல் அளித்த சுருதியின் தந்தை
இந்த சூழலில், நேற்று காலை முதல் சுருதியின் தந்தை பாலன், குன்னூரில் இருந்து சுருதியின் மொபைல் எண்ணிற்கு தொடர்பு கொண்டு உள்ளார். காலையில் இருந்து மாலை வரை மொபைல் எண்ணை தொடர்பு கொள்ள முடியாததால் சுருதியின் வீட்டிற்கு பாலன் நேரடியாக வந்தார். அங்கு வந்த பாலன் வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததாலும், வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதாலும் சந்தேகம் அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | 3 ஆண்டுகளாக கோமா..! 24 வயதில் இளைஞருக்கு நடந்த அநீதி..! என்ன நடந்தது?
நால்வரும் தற்கொலை
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடவள்ளி இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை தலைமையிலான போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ராஜேஷ், மனைவி சுருதி, மகள் யக்ஷிதா தாய் பிரேமா ஆகிய நால்வரும் தற்கொலை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இதனை அடுத்து போலீசார் நால்வரின் உடலையும் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற வகையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தற்கொலை வேண்டாமே!
தற்கொலை என்பது எதற்கும் தீர்வாகாது என்பதை கண்டிப்பாக அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். தற்கொலை எண்ணங்களில் இருந்து மீள்வதற்கும், உங்கள் பிரச்னையில் இருந்து வெளிவரவும் பல்வேறு மனோத்தத்துவ ஆலோசகர்கள் இருக்கின்றனர். அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை குறைந்து வருகிறது, 2020 ஆம் ஆண்டில், இந்தியாவில் 378 தற்கொலை முயற்சிகள் மட்டுமே பதிவாகின. 2021ல் இந்த எண்ணிக்கை 545 ஆக அதிகரித்தது. இருப்பினும், 2022 இன் முதல் 11 மாதங்களிலேயே இது ஏற்கனவே 770-ஐ தாண்டியதாக அறிவிக்கப்பட்டது. தற்கொலைக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், அவற்றில் இருந்து மீள முயற்சிப்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும் என்பதில் தெளிவு வேண்டும்.
(தற்கொலை எண்ணங்கள் எழுந்தால், சினேகா அமைப்பின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்புக் கொள்ளலாம். மேலும், தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104 க்கும் தொடர்புகொண்டு நீங்கள் பேசலாம்.)
மேலும் படிக்க | கண்மாயில் மீன் பிடித்த இளைஞர்களுக்கு அடி உதை! பகீர் வீடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ