1.8 கோடி மோசடியில் சிக்கி சஸ்பெண்ட் ஆன வங்கி அதிகாரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் நிலவள வங்கியில் நகைக் கடன் (Gold Loan) வழங்குவதில் ஒரு கோடியே 8 லட்சம் ரூபாய் கையாடல் செய்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலவள வங்கி செயலாளர் நீலகண்டன் கீரனூரில் உள்ள தனது வீட்டின் கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் நிலவள வங்கியில் 30 வருடமாக நீலகண்டன் பணியாற்றி வருகிறார். தற்போது அவர் செயலாளராக பதவி வகித்து வந்தார். மேற்கண்ட வங்கியில் புதுக்கோட்டை மாவட்டம் கீழையூர் சேர்ந்த சக்திவேல், கீரனூர் சேர்ந்த வங்கி சூப்பர்வைசர் கனகவேல் மற்றும் செயலாளரான நீலகண்டன் ஆகியோர் பணிபுரிந்து வந்தனர்.


இந்நிலையில், நகை கடன் வழங்குவதில், மூன்று பேரும் சேர்ந்து ஒரு கோடியே 8 லட்சம் ரூபாய் கையாடல் செய்ததாக கடந்த 10.12.2021 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரால் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள்.


ALSO READ | தந்தை - மகன் தூக்கிட்டு தற்கொலை; பரமக்குடியில் சோகம்


பின்னர் மூன்று நபர்களும் பணத்தை திருப்பி கட்டியுள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை  வீட்டில் இருந்து வெளியே சென்ற நீலகண்டன் தனது வீட்டில் உள்ள கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 


வீட்டில் உள்ளவர்கள் காலையில் எழுந்து அவரை தேடும் பொழுது அவர் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கீரனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தரப்பட்டது. 


அங்கு வந்த காவல்துறையினர் (TN Police) தூக்குமாட்டி இறந்த நீலகண்டனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


இந்நிலையில் இந்த வழக்கு சம்பந்தமாக நாளை 16.12.2001 விசாரணை கமிஷன் நடைபெற உள்ளது. இதில், வழகில் குற்றம் சாட்டப்பட்ட மூவரும் பங்கேற்க இருந்த நிலையில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நீலகண்டனின் குடும்பத்தில் மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | கொலையா? விபத்த? சாலையோரம் 5 வயது சிறுவன் சடலமாக கண்டெடுப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR