Armstrong murder CCTV : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் இம்மாதம் 5 ஆம் தேதி ரவுடிகளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பெரம்பூர் வேணுகோபால சுவாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன்பே மர்ம நபர்களால் அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அத்துடன் கொலையாளிகள் 11 பேர் சில மணி நேரங்களில் கைது செய்யப்பட்டனர். இந்த செய்தி தமிழ்நாடு மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் தீயாக பரவ தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து தேசிய அளவில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஆம்ஸ்டராங் கொலை குற்றவாளி மீது என்கவுண்டர் நடத்தப்பட்டது எப்படி?


பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் இந்த படுகொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். தமிழ்நாட்டிலும் சட்டம் ஒழுங்கு கவலையளிக்கும் விதமாக உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, திமுக கூட்டணி கட்சி தலைவர்களான செல்வப்பெருந்தை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரே விமர்சித்தனர். இதனால் கடும் கோபமடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குற்றவாளிகளை விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனடிப்படையில் ஐபிஎஸ் அதிகாரி அஸ்ரா கார்க் தலைமையிலான காவல்துறை, கைது செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளிடம் தீவிர விசாரணை நடத்தினர்.